பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மிஸ்டர் பஞ்ச் (பஞ்சைத் திரித்து பஞ்ச்"சாக்கி விட்டார் மிஸஸ் ராக்ஃபெல்லர்!) ஐ டோண்ட் நோ எனிதிங்... இந்த மேரேஜ்லே ஒரு ஸ்மால் கம்ப்ளெயிண்ட் கூட இருக்கக் கூடாது. யார் எது கேட்டாலும் ரெடியா இருக்கணும். டைகர் மில்க் வேண்டுமானாலும் கொண்டு வந்து சேர்த்துடனும். தெரிஞ்சுதா? நீங்கதான் எல்லாத்துக்கும் இன்சார்ஜ். ஹெல்ப்புக்கு வேணும்னா லல்லியை அழைச்சிக்கிட்டுப் போங்க. இப்பவே நீங்க ரெண்டு பேரும் இண்டியாவுக்கு ஃப்ளை' பண்ணி அங்கிருந்து குக்ஸையும், பாட்டீஸையும் உடனே அனுப்பறதுக்கு ஏற்பாடு செய்யுங்க. இன்று முதல் மெட்ராஸுக்கு டெய்லி நாலு சார்ட்டர்ட் ப்ளேன்ஸ் போய் போய் ரிடர்ன் ஆயிக்கிட்டே இருக்கும்' என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். டில்லி பஞ்சுவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. ஹெல்ப்புக்கு லல்லியை அழைத்துப் போகச் சொல்லிவிட்டாளல்லவா? அந்தச் சந்தோஷம்தான்! 'மிஸஸ் ராக்ஃபெல்லர் இங்கிதம் தெரிந்தவள்’ என்று அந்தச் சீமாட்டியை மனதிற்குள்ளாகவே வாழ்த்தினான். அடுத்த சில மணி நேரத்துக்கெல்லாம் பஞ்சுவும், லல்லியும் புறப்பட்டுவிட்டார்கள். நாலு விமானங்கள்