பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 65 'ரெட் பார்டர் ஒண்டர்புல்!' என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லரின் சிநேகிதி ஒருத்தி. "ஹவ் டு தே புட் பாரலல் லைன்ஸ்?" என்று வியந்தனர் இன்னும் சிலர். 'சந்திர மண்டலத்துக்கு ராக்கெட் விடறவாளுக்கு நாம் கோலம் போடறது ஒரு பெரிய அதிசயமாயிருக்கு என்றார் LĎffL0 ff. 'இந்த கோலத்துக்கே இவ்வளவு கூட்டம் கூடினால் ஊர்கோலத்தை எப்படித்தான் சமாளிக்கப் போகி றோமோ?' என்று பெருமூச்சு விட்டார் அய்யாசாமி.