பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வாஷிங்டனில் திருமணம் | 'நானே சொல்லணும்னு நினைச்சேன். நமக்கெல்லாம் மடியா ஸ்நானம் பண்றத்துக்கு ஒரு இடம் வேண்டுமே: என்றாள் பாட்டி. "சரி, நேரமாகிறது; எல்லோரும் தூங்கப் போகலாம். விடியற்காலமே எழுந்திருக்க வேண்டும்" என்று கூறினாள் அத்தை. மிஸஸ் ராக்ஃபெல்லர் மட்டும் அன்று இரவெல்லாம் தூங்கவேயில்லை. தன்னுடைய உறவினர்களுக்கும் சிநேகிதர்களுக்கும் டெலிபோன் செய்து காலையில் ஹோலிவாட்டர் ஸ்ப்ரிங்க்ளிங் பங்ஷன் நடக்கிறது. அவசியம் வந்துவிடுங்கள் என்று ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தாள். பொழுது விடிந்ததுதான் தாமதம். விஸ் கன்ஸின் அவென்யூவிலும், ஆர். ஸ்ட்ரீட்டிலும் வண்டிப் போக்குவரத்தைத் தடை செய்யும் அளவுக்குக் கூட்டம் கூடிவிட்டது. ஜார்ஜ் டவுனிலுள்ள பெண்மணிகள், ஆண்மணிகள், சிறுவர், சிறுமியர் எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்து விட்டார்கள். காரணம், சம்மர் ஹவுஸ் டம்பர்ட்டன் ஒக்ஸ் வாசல்களில் கோலம் போடும் காட்சியைக் காணத்தான். பாட்டி, ஒரு பாத்திரத்தில் அரிசிமாவைக் கரைத்து எடுத்துக் கொண்டு விரல்களை வளைத்து வளைத்துப் போட்ட கோலத்தை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். விசாலம் குழல் கோலம் போட்டாள். அத்தை செம்மண்ணைக் கரைத்துக் கோலங்களுக்குச் சிவப்பு நிறத்தில் பார்டர் கட்டினாள். "லவ்லி டிலைன்ஸ் என்றாள் மிஸஸ். ராக்ஃபெல்லர்.