பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 63 "பஞ்சு நீ நாளைக்கே புறப்பட்டுப் போய் சமையல்காரர்களையும், பாட்டிமார்களையும் விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட வேண்டும்...' என்றார் மாமா. 'உளுந்து, அரிசி, உரல், உலக்கை, மணை, அப்பளக் குழவி இவ்வளவும் வரவேண்டும்' என்றாள் விசாலம். மேரேஜ் ரொம்பப் பிரமாதமாக நடக்கணும். வாட்டெவர் யூ வாண்ட் வரவழைத்து விடுங்கள்' என்று உற்சாகப்படுத்தினாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'சரி, நாளைக்கே எல்லாவற்றுக்கும் ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டு, யார் யாருக்கு என்னென்ன வேலை என்பதை அலாட் செய்துவிடலாம்' என்றான் பஞ்சு. 'நகை செய்யும் ஆசாரிகளும் சீக்கிரம் வந்துவிட்டால் தேவலை. அவ்வளவு நகைகளும் செய்தாக வேண்டுமே” என்றாள் விசாலம். - 'பந்தல் போடுகிறவர்கள் கூடத்தான் முன் கூட்டியே வந்தாக வேண்டும்" என்றார் மாமா. "ஆசாரி என்றால் யார்?...' என்று கேட்டார் ஹாரி ஹாப்ஸ். - 'கோல்ட்ஸ்மித்' என்றார் மாமா. 'கோல்ட்ஸ்மித் என்ற பெயரில் இங்கேயே ரொம்பப் பேர் இருக்கிறார்களே' என்றார் ஹாப்ஸ். 'இந்த கோல்ட்ஸ்மித்துக்கள் வேறு. எங்கள் ஊர் ஆசாரிகள் வேறு என்றார் மாமா. 'முதலில் தோட்டத்தில் ஒரு பெரிய கிணறு வெட்டி ராட்டினம் போட்டு, துணி துவைக்கிற கல்லும் போட்டால் தேவலை...' என்றாள் அத்தை.