பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வாஷிங்டனில் திருமணம் | எதை நினைச்சாலும் அதைக் கொண்டுவந்து விடலாம். என்றார் மாமா. 'முதலில் லட்சம் அப்பளம் இட்டு முடியணுமே!’ என்று கவலைப்பட்டாள் பாட்டி. 'அதுதான் அப்பளம் உலர்த்துவதற்கு இடம்கூடப் பார்த்தாகிவிட்டதே! இன்னும் என்ன கவலை?" என்று கேட்டாள் அத்தை. 'எந்த இடம் ஃபிக்ஸ் ஆச்சு? என்று கேட்டார் அம்மாஞ்சி. 'நேஷனல் ஆர்ட் காலரிதான். அதன் மாடிதான் விசாலமாயிருக்கு" என்றாள் அத்தை. - "ஆமாம். அப்பளம் இடுவதும் ஒரு ஆர்ட்தானே?" என்றார் ராக்பெல்லர் மாமி. 'நாளைக்கே அப்பள வேலையை ஆரம்பித்தால்தான் முடியும். தஞ்சாவூர், திருநெல்வேலி, பாலக்காடு மூன்று ஊர்களிலிருந்தும் பாட்டிமார்களை அழைத்து வர வேண்டும். சம்மர் ஹவுஸில் அப்பளத்தை இட்டு ஹெலிகாப்டரில் கொண்டு போய் ஆர்ட் காலரி மாடியில் உலர்த்திவிடலாம்' என்றார் மாமா. - 'மழை, காத்து வராமல் இருக்கணு மே' என்றாள் அத்தை. - 'ஆர்ட் காலரி மாடி முழுவதும் பந்தல் போட்டுவிடச் சொல்லட்டுமா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'பந்தல் போட்டுவிட்டால் அப்பளத்துக்கு வெயில் இல்லாமல் போய்விடுமே!’ என்றாள் மிஸஸ் மூர்த்தி. "ஓ! அதை மறந்துவிட்டேனே!" என்றாள் ராக்ஃபெல்லர் மாமி