பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 61 "சரி, கல்யாணத்துக்கு மொத்தம் எத்தனை தேங்காய் வேண்டியிருக்கும்? சொல்லும் பார்க்கலாம் ' என்று கேட்டார் அய்யாசாமி. "குறைந்தது இரண்டு லட்சமாவது தேவைப்படாதோ? ராக்ஃபெல்லர் மாமியைச் சார்ந்தவாளே நிறையப் பேர் வருவாளே!' என்றார் அம்மாஞ்சி. 'டு லாக்ஸ் போதுமா? ஒன் மில்லியன் கோகனட் வேண்டுமானாலும் ஹவாயிலிருந்து வரவழைத்து விடுகிறேன். எங்களுக்கு அங்கே ஒரு பெரிய எஸ்டேட் இருக்கிறது" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'ரொம்ப நல்லதாப் போச்சு. பந்தலுக்கு வேண்டிய தென்னங்கீற்றைக் கூட அங்கிருந்தே கொண்டு வந்து விடலாமே!” என்றார் மாமா. 'மஞ்சள் குங்குமத்திலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றை யும் விடாமல் ஜாபிதா போட்டுக் கொள்ளுங்கள். ஒன்றையும் மறக்கக் கூடாது' என்றாள் அத்தை. 'நாளைக்கே இரண்டு வீட்டுக்கும் புண்ணியாக வாசனத்தை நடத்தி விடலாம்' என்றார் அம்மாஞ்சி. 'அதுவும் சரிதான். வெள்ளிக்கிழமையாகவும் இருக்கிறது" என்றார் அய்யாசாமி. - "அப்படீன்னா விடியற்காலம் மூணு மணிக்கே எழுந்து வீடெல்லாம் மெழுகிப் பெருக்கிக் கோலம் போட்டுச் செம்மண்ணும் இட்டு விடுவோம்' என்றாள் அத்தை. 'ஏப்ரல் மாசத்திலேயே கல்யாணத்தை நடத்தி விடலாமா?’ என்று கேட்டார் அம்மாஞ்சி. "ஆமாம்; சுபஸ்ய சீக்கிரம்னு சொல்லுவா பெரியவா, எதுக்கு டிலே பண்ணனும்? விமானம் ரெடியா இருக்கு.