பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வாஷிங்டனில் திருமணம் சொல்லுமேன். இதிலே வேறு ஜம்பமா? " என்றார் சாஸ்திரிகள். "அலையறதாவது? வாக்கிங் என்று சொல்லும்' என்றார் அம்மாஞ்சி. 'அம்மாஞ்சி வாத்தியாரே கையிலே என்ன அது என்று கேட்டான் பஞ்சு. “மாவிலைக் கொத்து, நாளைக்குப் புண்ணியாகவாசனம் செய்ய வேண்டாமா?" டில்லி பஞ்சு சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்?" அம்மாஞ்சி கேட்டார். 'இது மாவிலை இல்லையே! வேறு ஏதோ இலை!" என்றான் பஞ்சு. 'பார்ப்பதற்கு அப்படித்தான் இருக்கும். இது அசல் அமெரிக்கா தேசத்து மாவிலை' என்று சமாளித்தார் அம்மாஞ்சி. . - சிம்மர் ஹவுஸில் ராக்ஃபெல்லர் மாமியும் மற்றவர் களும் கல்யான ஏற்பாடுகளைப் பற்றிச் சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். அம்மாஞ்சியும் சாஸ்திரிகளும் வருவதைக் கண்டதும், 'வாங்கோ அம் மாஞ்சி! ஏன் இவ்வளவு லேட்?" என்று கேட்டார் அய்யாசாமி. 'இந்த பேப்பர்காராள் எங்களை விட்டாத்தானே? கேள்வி மேலே கேள்வி கேட்கிறார்கள்? தக்ளியில் நூல் நூற்றுக் காட்டணுமாம். அதை ஒரு எக்ஸிபிஷனா நடத்தணுங்கறா ஆகட்டும்; வாஷிங்டன் ஸ்தூபி மேலேயே ஏறி நின்று நூற்றுக் காட்டுகிறோம் என்று சொல்லித் தப்பித்துக் கொண்டு வந்தோம். அதுதான் லேட்' என்றார் அம்மாஞ்சி. .