பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 59 'தரையில் பள்ளம் வெட்டித் தக்ளி இடிக்காமல் நூற்றால் போகிறது' என்றார் ஒரு நிருபர். 'அதைவிட வாஷிங்டன் ஸ்தூபி மீது ஏறி நின்று கொண்டு நூற்கலாமே" என்றார் அம்மாஞ்சி. 'ஒண்டர்புல் ஐடியா ஒரு எக்ஸிபிஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்தால் எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள்' என்று சொல்லிவிட்டுப் போனார்கள் பத்திரிகை நிருபர்கள்! அவ்வளவுதான் 'ஸ் பின்னிங் மேன் ஃப்ரம் காந்தி லாண்ட்!" என்று அன்று மாலையே பத்திரிகைகளில் செய்தி வெளியாகிவிட்டது. அம்மாஞ்சியும், சாஸ்திரிகளும் ஜாகைக்குத் திரும்பிச் செல்வதற்குள் மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது. இருவரும் வழி தெரியாமல் தெருத் தெருவாக அலைந்து அலைந்து ஜார்ஜ் டவுன் முழுதும் சுற்றிவிட்டுக் கடைசியாக ஆர். ஸ்ட்ரீட்டுக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தனர். வெகு நேரமாகிவிடவே, டில்லி பஞ்சு காரை எடுத்துக் கொண்டு அவர்களைத் தேடக் கிளம்பிவிட்டான். அம்மாஞ்சியும், சாஸ்திரியும் ஆர். ஸ்ட்ரீட்டிலேயே அலைந்து கொண்டிருப்பதை கண்ட பஞ்சு, 'உங்களைத் தேடிக் கொண்டு எங்கெல்லாம் அலைகிறது? மிஸஸ் ராக்ஃபெல்லர் உங்களிருவரையும் உடனே அழைத்து வரச் சொன்னார்' என்றான். 'குளிர்ந்த வேளையில் ஜார்ஜ் டவுனை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தோம். அதனால் - லேட்டாகிவிட்டது' என்றார் அம்மாஞ்சி. 'வீட்டுக்கு திரும்பி வர வழி தெரியாமல் அலைஞ் சோம்னு