பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி - 75 வந்திருந்த வண்ணக் குழவிகளை வாங்கி அவற்றைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே, "பெகூலியர் ஷேப் நாள் ஒன்றுக்கு ஒரு பாட்டி எத்தனை அப்பளம் செய்வாள்?' என்று கேட்டாள். 'நூறு, நூற்றைம்பது...' என்று பதில் கிடைத்தது. "மோர் தேன் ஏ செஞ்சுரி!” என்று வியந்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். . 'மூணு நாளில் ஸஹஸ்ரநாமம் கூடச் செய்து முடிக்கலாம். இதென்ன பிரமாதம்?' என்றார் அம்மாஞ்சி. 'என் ஃபிரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் எல்லோரும் நாளைக்கு வராங்க. அப்பளம் இடுவதைப் பார்க்க அவங்களெல்லாம் ரொம்ப ஆசையாயிருக்காங்க" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். மறுநாளே பாட்டிமார்கள் அப்பளம் இடத் தொடங்கிவிட்டார்கள். அறுபத்துமூவர் உற்சவம், நேரு மீட்டிங், எலிசபெத் ராணி விஜயம், கிரிக்கெட் மாட்ச் இம்மாதிரி சமயங்களில் கூடக் காண முடியாத அத்தனை பெரிய கூட்டம் வாஷிங்டன் நேஷனல் ஆர்ட் காலரி வாசலில் கூடியிருந்தது! காரணம், அத்தனை பாட்டிமார் களும் இட்டுப் போடுகிற அப்பளங்கள் அந்த மாடிக்குத் தான் ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டன. பத்திரிகைகளில் அப்பளத்தைப் பற்றிய வர்ணனைகளும், செய்தி களும் அடுத்தடுத்து வந்து கொண்டேயிருந்தன. ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரில் அப்பளங்கள் வருகிறபோது மக்கள் தேர் தேர் கம்ஸ் தி ஹெலிகாப்டர்’ என்று கையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.