பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வாஷிங்டனில் திருமணம் I ஆர்ட் காலரி வாசலில் ஒரு பெரிய போர்டு வைக்கப்பட்டிருந்தது. நம் ஊர்களில் கிரிக்கெட் டெஸ்ட் நடந்து கொண்டிருக்கும்போது ஸ்கோர் போர்டில் ரன்களையும், ஒவர்களையும் போட்டுக் கொண்டிருப்பார்களல்லவா? அந்த மாதிரி, எத்தனை பாட்டிமார்கள் எத்தனை அப்பளம் இட்டார்கள்? எவ்வளவு பேர் செஞ்சுரி போட்டார்கள்? எந்த குரூப் எவ்வளவு அப்பளம் இட்டு முடித்தது? போன்ற விவரங்களை போர்டில் மணிக்கொரு முறை எழுதிக் கொண்டே இருந்தார்கள்! முதல் நாளே அப்பள ஸ்கோர் பதினைந்தாயிரத்து முன்னூற்றைம்பதை எட்டிப் பிடித்துவிட்டபோது வாஷிங்டன் மக்கள் வானமே அதிர்ந்து போகிற மாதிரி கை தட்டி ஆரவாரம் செய்தனர். டாஞ் சூர் குரூப்தான் அதிக அப்பளம் இட்டு முடித்திருந்தார்களாதலால், 'டாஞ் சூர் குரூப் லீடிங் , 'பால்காட் செகண்ட்', 'டின்னவெல்லி லாஸ்ட்'... என்று சொல்லிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். 'பால்காட் மே லீட் டுமாரோ என்று பத்திரிகைகளில் வெளியான ஹேஷ்யங்களைப் பார்த்துவிட்டு கூட்டத்தினர், 'ஐ பெட் பால் காட் இஸ் நாட் வின்னிங்' என்று தங்களுக்குள் பந்தயம் கட்டிக் கொண்டார்கள். "ஒரு அப்பளத்தைக் கூடக் கண்ணால் பார்க்க முடியவில்லையே!' என்று சிலர் வருத்தப் பட்டனர். அங்கே, சம்மர் ஹவுஸிலும், டம்பர்ட்டன் ஒக்ஸிலும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அப்பளம் புரொடக்ஷனைப் பார்க்க மிஸ்ஸ்