பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 77 ராக்ஃபெல்லரின் உறவினர்களும், சிநேகிதர்களும் நூறு பேருக்கு மேல் கூடியிருந்தார்கள். பாட்டிமார்கள் வரிசை வரிசையாகவும், அர்த்த சந்திர வடிவத்திலும் உட்கார்ந்து கொண்டு அப்பளம் இடுகிற காட்சியைக் கண் கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். சில பாட்டிமார்கள் ஒரு பக்கம் உரல்களை வரிசையாக வைத்து அப்பள மாவு இடித்துக் கொண்டிருந்தனர். 'உலக்கையின் நுனியில் ஏன் இரும்புப் பூண் போடப்பட்டிருக்கிறது?’ என்று கேட்டாள் அமெரிக்க மாது ஒருத்தி. 'இல்லாவிட்டால் உலக்கையின் நுனியில் கொழுந்துவிட்டுத் துளிர்த்துவிடும். அதற்காகத்தான் பூண் போட்டு வைத்திருக்கிறார்கள்' என்று அம்மாஞ்சி ஒரு போடு போட்டார். அப்பள உருண்டைகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு, வெரி ஸாப்ட் பால்ஸ் ' என்று கூறி வியந்தனர் சில அமெரிக்க மாதர்கள். மிஸஸ் ராக்ஃபெல்லரின் உறவுக்காரப் பெண் ஒருத்தி அப்பள உருண்டையைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அது அவள் கையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. உடனே அவள் அதை இன்னொரு கையால் இழுத்தாள். அது இன்னொரு கையிலும் ஒட்டிக் கொண்டு ரப்பர் போல் நீண்டது. மேலும் இழுத்தால் அறுந்துபோகும் என பயந்த அவள் தன் இரண்டு கைகளையும் வெகு நேரம் அப்படியே வைத்துக் கொண்டிருந்தாள்! சிலர் அப்பள மாவை வாயில் போட்டுச் சுவைத்தபோது பற்களோடு ஒட்டிக் கொள்ளவே, இண்டியன் சுவிங்கம்! என்று வர்ணித்தார்கள். --