பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வாஷிங்டனில் திருமணம் | அமெரிக்க விஞ்ஞானிகள் அப்பள உருண்டைகளைக் கண்ணாடி டியூபுகளில் போட்டு விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி நடத்திப் பார்த்துவிட்டு, இதைப் போன்ற அதிசயப் பொருள் உலகத்தில் வேறு கிடையாது என்ற கருத்தைத் தெரிவித்தனர். அமெரிக்க தொழிலதிபர்கள் பலர் கோடிக் கணக்கில் அப்பளங்கள் புரொட்யூஸ் செய்து ரஷ்யாவைத் திகைக்க வைக்க வேண்டும் என எண்ணினார்கள். ஒரு பாட்டி அம்மாளை அழைத்து உளுந்து ஊறப் போடுவது முதல் எல்லா விவரங்களையும் விளக்கமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். "எல்லாம் சரிதான்; அப்பளங்களை எப்படி வட்டமாகச் செய்கிறீர்கள்?' என்று கேட்டார் ஒருவர். 'உங்களிடம் காம்பஸ் கூட இல்லையே! பென்சிலால் வட்டமாகக் கோடு போட்டுக் கொண்டு கத்தரியால் வெட்டி எடுப்பீர்களா? அப்படியானால் மிச்சம் விழும் கட்பீஸுகளை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார் இன்னொருவர். பாட்டியம்மாள் சிரித்துக் கொண்டே, 'இது ரொம்ப ஈஸி! இதோ பாருங்கள் என்று சொல்லி வட்ட வடிவமான அப்பளம் ஒன்றை இட்டுக் காட்டினாள். அதைக் கண்ட விஞ்ஞானிகள் வியந்து போனார்கள் கடைசியில், அவர்கள் அப்பள வrட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களைக் கண்டு பிடிப்பது சாத்தியமென்றும், ஆனால் அந்த வீட்டுகளை வட்டமாகக் கத்தரித்து எடுப்பதற்குத் தனியாக வேறு இயந்திரத்தைத்தான் உபயோகிக்க வேண்டுமென்றும் கூறினர். 'அப்படியானால், அந்த மெஷின்களை உடனே தயார் செய்யுங்கள்" என்றனர் தொழிலதிபர்கள்.