பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 84 கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் பாட்டியின் சார்பில் பஞ்சு தான் பதில் கூறினான். 'ஆர் யூ தி கேப்டன் ஆப் டாஞ்சூர் டீம்?' என்று கேட்டார் ஒரு நிருபர். 'நோ-ஷி இஸ் ப்ரம் டின்னவெல்லி!” என்றான் பஞ்சு, சிலர் எச்சுமிப் பாட்டியிடம் 'ஆட்டோகிராஃப் கேட்டனர். 'ஆட்டோகிராஃப்பாவது? ஆட்டோ ரிக்ஷாவாவது? அதெல்லாம் எனக்கொன்றும் தெரியாது’ என்று கூறிவிட்டு வேகமாகப் போய்விட்டாள் அந்தப் பாட்டி. - அந்தச் சமயம் அந்தப் பக்கமாக வந்த மிஸ்ஸ் ராக்ஃபெல்லர், 'பாட்டீலைத் தொந்தரவு செய்யாதீங்க. அவங்க ரெஸ்ட் எடுத்துக்கட்டும்... ' என்று கூறிக் கூட்டத்தினரைப் போகச் சொன்னாள். .