பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெயில் வரப் போகிற நேரத்தில் ஜங்ஷனில் ஒருவித பரபரப்பு உண்டாகுமே, அத்தகைய சூழ்நிலை சம்மர் ஹவுஸுக்குள் நிலவியது. பாட்டிகள் எல்லோருமாகச் சேர்ந்து லட்சம் அப்பளங்களை இட்டு முடித்துவிட்டு, கை முறுக்கு, பருப்புத் தேங்காய், தேங்குழல் முதலிய பட்சனங்கள் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். மிஸ்ஸ் ராக்ஃபெல்லர், நின்ற இடத்தில் நிற்காமல் ஆச்சா, போச்சா?’ என்று பம்பரமாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தாள். அய்யாசாமி அய்யர், அம்மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரிகள், மாமா, மூர்த்தி அனைவரும் காலையிலேயே கிணற்றடியில் ஸ்நானத்தை முடித்துவிட்டு அன்றைய ஜோலிக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். பதினைந்து ஏக்கர் விஸ்தீரணமுள்ள சம்மர் ஹவுஸ் காம்பவுண்டுக்குள் பந்தல் போடுவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக முனைந்திருந்தான் பஞ்சு. இஞ்ச் டேப்பும் கையுமாக தோட்டம் முழுவதும் குறுக்கும் நெடுக்கும் அலைந்து, எங்கெங்கே கால்கள்