பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 83 ஆஹன்ற வேண்டும் என்பதற்கு அடையாளமாகச் கண்ணாம்பினால் வெள்ளைக் கோடு போட்டுக் கொண்டிருந்தான். வேலையாட்கள், கையில் கடப்பாரை சகிதம் பஞ்சுவின் பின்னோடு ஒடிக் கொண்டிருந்தனர். 'கிச்சனுக்குள்ளிருந்து வந்த கம் மென்ற வாசனை உள்ளே ரவா உப்புமா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது. "மொத்தமாக ரவா உப்புமா கிண்டுகிறபோது வருகிற வாசனையே அலாதிதான்' என்று மூக்கை உறிஞ்சி இழுத்தார் அம்மாஞ்சி. . 'கறிவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பு இந்த ஐந்தும் சேருகிறபோது, அடடா!...” என்று நாக்கில் தண்ணிர் சொட்டக் கூறினார் சாம்பசிவ சாஸ்திரிகள். 'பச்சைப் பசேல்னு வாழை இலையைப் போட்டு, அதன் மேலே புகையப் புகைய நெய்யுடன் மினுமினுக்கும் உப்புமாவை வைக்கிறபோது, அதில் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கும் முந்திரியை விரலாலே தள்ளிச் சாப்பிட்டால் அந்த ருசியே விசேஷம்தான்' என்றார் அம்மாஞ்சி. 'வாஷிங்டன் நகரத்திலே வாழை இலை போட்டு சாப்பிடறது அதைவிட விசேஷம்!' என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள். "எல்லோரையும் டி.பனுக்கு வரச் சொல்றா ராக்ஃபெல்லர் மாமி என்று அழைத்தாள் மிஸஸ் மூர்த்தி. "இதோ ரெடியாகக் காத்துண்டு இருக்கோம் என்று. சொல்லியபடியே உள்ளே நுழைந்தனர் எல்லோரும். "பஞ்ச் வரவில்லையா? இப்ப என்ன டயம் ஆச்சு?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். - .”