பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வாஷிங்டனில் திருமணம் 'ஸ்ெவனே கால்' என்றார் அம்மாஞ்சி. “எட்டு மணிக்கு நியூயார்க்கிலிருந்து என் ஹஸ்பெண்ட் வருகிறார். அவர் பத்து மணிக்கெல்லாம் மறுபடியும் திரும்பிப் போய் விடுவார். அதனாலே அவர் இங்கே இருக்கிறபோதே மேரேஜாக்கு டேட் பிக்ஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறேன்... நீங்க என்ன சொல்றீங்க, அய்யாஸாம்?' என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'பிள்ளையின் ஃபாதரும் மதரும் வரவில்லையே என்று பார்க்கிறேன்' என்றார் அய்யாசாமி. 'அவர்கள் எல்லோரும் இப்போ எட்டரை மணி ப்ளேன்லே வந்து விடுவார்கள்... ' என்று சொல்லிக் கொண்டே வந்தான் பஞ்சு. "இன்னும் வேறு யாரெல்லாம் வராங்க பஞ்ச்?' என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக்ஃபெல்லர். 'பத்துப் பாத்திரம் தேய்ப்பவர்களும், சந்தனம் அரைக்கிறவர்களும் வருகிறார்கள். வாழை இலைக் கட்டு, மாவிலைக் கொத்து, பரங்கிக்காய், பூசணிக்காய், கத்தரிக்காய், தேங்காய், வெற்றிலை, புஷ்பம் இவ்வளவும் இன்னொரு ப்ளேன்லே வருகின்றன.' 'பத்துப் பாத்திரம் தேய்க்கிறவங்கன்னா அது யாரு?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'டென் வெஸ்ஸல்ஸ் தேய்க் கிறவா" என்று மொழி பெயர்த்துக் கூறினார் அம்மாஞ்சி. டென் வெஸ்ஸல் ஸ்தானா? () ட்வெண்டி ஹண்ட்ரட் வெஸ்ல்ஸ் என்று கூறினாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.