பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 85 பத்துப் பாத்திரம் என்றால் என்னவென்பதை மிஸஸ் மூர்த்தி விளக்கிச் சொன்ன பிறகு, 'ஒ, ஐ n!' என்று மோட்டி ராக்ஃபெல்லர் சிரித்துக் கொண்டாள். "பஞ்ச் பாத்திரம் தேய்க்கிறவங்களை நானே நேரில் போய் ரிஸிவ் செய்யணுமா? எத்தனை மணிக்கு ப்ளேன்?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். "வேண்டாம் மேடம்! நாங்கள் இருவரும் போனாலே போதும் ' என்று கூறிய பஞ்சு, லல்லியைக் கடைக் கண்ணால் கவனித்தான். 'கோல்ட்ஸ்மித்தெல்லாம் எப்ப வரப் போறாங்க? அவங்க செய்யப் போகிற ஜ்வெல்ஸெல்லாம் பார்க்கணும் போல ஆசையாயிருக்கு. கழுத்திலே ஒட்டியாண்... காதிலே புல்லக்... அப்புறம் வாட் மிஸ் டர் பஞ்ச்?' என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். "புல்லக் இல்லை மேடம் புல்லாக்கு அதைக் காதிலே மாட்டிக்க மாட்டாங்க. மூக்கிலே போட்டுக்குவாங்க. இடுப்பிலே ஒட்டியாணம்' என்று சிரித்துக் கொண்டே கூறினான் பஞ்சு. "ஐ-ஸி ஹியர் ஒட்டியாண் ஹியர் புல்லாக்... ஹியர் டாலி..." என்று அபிநயம் பிடித்துக் காட்டினாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'இதெல்லாம் போட்டுக் கொள்ளணும்னா, இண்டியன் ஸ்டைலில் லாரியும் கட்டிக் கொள்ளணுமே!’ என்றாள் மிஸஸ் மூர்த்தி. “ஸாரி கூடத்தான் கட்டிக் கொள்ளப் போகிறேன் பஞ்ச்! நீ நாளைக்கே மெட்ராஸுக்குப்போய்கோல்ட்ஸ்மித்ஸை அனுப்பி வை. இண்டியாவிலிருந்து எத்தனை கோல்ட்ஸ்மித் வேனுமானாலும் வருவாங்களா?”