பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாஷிங்டனில் திருமணம் | "ஓ! இப்ப எத்தனை கோல்ட்ஸ்மித் வேணும்னாலும் கிடைப்பாங்க என்றான் பஞ்ச். "நான் கூடத் தோடும் பேசரியும் போட்டுக் கொள்ளப் போகிறேன் என்றாள் லோரிட்டா. "தோடும் பேசரியும் போட்டுக் கொள்ளணும்னா காது மூக்கு குத்தாமல் எப்படி முடியும்? இந்த வயசிலே காதைக் குத்தினால் வலிக்குமே” என்றாள் லோசனா. 'பரவாயில்லை; குளோரோஃபார்ம் குடுத்துக் குத்திடலாம். லோரிட்டா ஆசைப் பட்டதைச் செய்திடுவோம். அப்புறம் வேறே என்ன நகை வேணும் லோரிட்டா? என்று கேட்டாள் மிலஸ் ராக்ஃபெல்லர். "டாலி!” என்றாள் லோரிட்டா. 'தாலியா? அப்படின்னா நீ கூட மேரேஜ் செய்துக்கப் போறயா? என்று கேட்டு விட்டுச் சிரித்தாள் மிஸஸ் மூர்த்தி. - "நோ நோ டாலிதான் ரொம்ப ஜாலியா இருக்குது. அதை நான் சும்மாவே கட்டிக்கப் போகிறேன்' என்று கூறினாள் லோரிட்டா. “அசடாயிருக்கே இந்தப் பெண்ணு! தாலி கட்டிக்கப் போறதாமே!” என்று கேலி செய்தார் அம்மாஞ்சி. 'தாலி வேணாக் கட்டிக் கொள்ளட்டும்... தங்கத்தாலே அம்மிக் கல் வேணாலும் செய்து கட்டிக் கொள்ளட்டுமே! - உமக்கெதுக்கய்யா இந்த வம் பெல், லாம்?' என்றார் சாஸ்திரிகள். "இலை போட்டாச்சு, எல்லோரும் டிபன் சாப்பிட வாருங்கள்...' என்று அழைத்தார் மாமா,