பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - வாஷிங்டனில் திருமணம் பார்த்துவிட்டு கைக்குட்டையில் துடைத்துக் கொண்டே 'லிக்விட் ஸாண்டல் எக்ஸ்லெண்ட்!" என்று கூறித் தாம்பூலம் பெற்றுக் கொண்டார் ராக்ஃபெல்லர். அய்யாசாமி அய்யர் மனைவி, மிஸஸ் ராக்ஃபெல்ல ரிடம் குங்குமத்தைக் கொடுத்து, "ராக்பெல்லர் மாமி இதை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்' என்றாள். மிஸ்ஸ் ராக்ஃபெல்லர் அதை வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபோது பெண்டுகள் அனைவரும் சிரித்துக் கொண்டே, 'மாமிக்குக் கொசுவம் வைத்துப் புடவையும் கட்டிவிட்டால் சுமங்கலிப் பிரார்த்தனையில் உட்கார வைத்துவிடலாம்' என்றனர். முகூர்த்தப் பத்திரிகை எழுதி முடிந்ததும் அதை வள்ளித் தட்டில் வைத்துக் கொண்டு போய் ஒவ்வொருவரிடமும் காட்டினார் அம்மாஞ்சி. எல்லோரும் பத்திரிகையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்தனர். 'இன்னும் ட்வெண்டி டேஸ் தான் இருக்குது. இம்மீடியட்டா இன்விடேஷன் பிரிண்ட் ஆகணும். அதுதான் ரொம்ப முக்கியம். அர்ஜெண்ட்!" என்றார் அய்யாசாமி. "மிஸ்டர் பஞ்ச் இன்றைக்கே நீ மெட்ராஸ் போய் அங்கே நமக்காக ஒரு ஏஜெண்டைப் பார்த்துப் பேசி ஏற்பாடு பண்ணி விடு. நமக்கு எந்த டயத்திலே எது வேணுமானாலும் அந்த ஏஜெண்டுதான் வாங்கி அனுப்பணும். உனக்குத் தெரிஞ்ச ஆசாமிங்க யாராவது இருக்காங்களா?” "ஒ எஸ். பாப்ஜின்னு மெட்ராஸிலே ஒரு பிரண்ட் இருக்காரு. மேரேஜ் காண்ட்ராக்ட்தான் அவருக்குத் தொழில்' என்றான் பஞ்சு,