பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 93 பிள்ளை வீட்டு வாத்தியார் அப்பு சாஸ்திரிகள் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்துப் பூஜை செய்தார். பிறகு பஞ்சாங்கத்தைப் புரட்டி ஏப்ரல் மாதத்திலுள்ள முகூர்த்த நாட்களையெல்லாம் வரிசையாகச் சொல்லிக் கொண்டு வந்தார். 'ஏப்ரல் 29-ஆம்தேதி திங்கள்கிழமை ரொம்ப சிலாக்கிய மான முகூர்த்தம்' என்றார் அம்மாஞ்சி. 'அப்படியானால் அன்றைக்கே வைத்துக் கொண்டுவிடலாமே!’ என்றார் பிள்ளைக்குத் தகப்பனார். ‘'எதற்கும் பெண்டுகளையும் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள். அவா செளகரியம் எப்படியோ?" என்றார் அம்மாஞ்சி ஓர் அசட்டுச் சிரிப்புடன். பெண்ணுக்கு அம்மா, பிள்ளைக்குத் தாயார் இருவரும் தனியாகப் போய் ஏதோ பேசிவிட்டுத் திரும்பி வந்து, 'ஏப்ரல் 29-ஆம் தேதியே இருக்கட்டும். அன்றைக்குச் செளகரியம்தான்' என்றனர். ‘'எதுக்கு நீங்க ரெண்டு பேரும் மட்டும் தனியாகப் போய் ஏதோ nக்ரெட்டாகப் பேசிட்டு வlங்க?" என்று கேட்டார் மிஸஸ் ராக். மூர்த்தியின் மனைவி லோசனா, மிஸஸ் ராக்கை உள்ளே அழைத்துச் சென்று அந்தச் சீமாட்டியின் காதோடு ஏதோ ரகசியமாகக் கூறினாள். விஷயத்தைப் புரிந்துகொண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் சிரித்துக் கொண்டே லோசனாவுடன் வெளியே வந்தாள்! 'அப்பு சாஸ்திரிகளே! நீங்களே உங்க கையாலே மஞ்சளைத் தடவி முகூர்த்தப் பத்திரிகையை எழுதி விடுங்கள். காட்டன் லார் (பஞ்சுவுக்கு ஆங்கிலப் பெயர்) நீங்க எல்லோருக்கும் சந்தனம், தாம்பூலம் கொடுக்கலாம்' என்றார் அம்மாஞ்சி. முதலில் ராக்ஃபெல்லர் பிரபுவுக்குச் சந்தனம் கொடுத்தான் பஞ்சு. சந்தனத்தைத் தொட்டு வாசனை