பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வாஷிங்டனில் திருமணம் | டிராயிங் ஹாலில் பெரிய பெரிய கார்ப்பெட்டுகளை விரித்து, தாம்பூலம், சந்தனம், மஞ்சள், குங்குமம் எல்லாவற்றையும் எடுத்து வைப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர் பஞ்சுவும், லல்லியும். 'எல்லோரும் ஹாலுக்கு வரலாம்' என்று அழைத்தார் அம்மாஞ்சி. 'இவர்தான் அம்மாஞ்சி! வெரி ஹ்யூமரஸ் ஸயண்டிஸ்ட்' என்றாள் மிஸஸ் ராக். அப்பளங்கள் ஆகாசத்தில் பறந்த செய்தியைப் பற்றி விசாரித்தார் ராக்ஃபெல்லர். 'அது உங்களுக்கு எப்படித் தெரியும் நியூஸ் பேப்பரில் படித்தீர்களா?' என்று வியப்புடன் கேட்டுக் கொண்டே உள்ளே சென்று அப்பளம் ஒன்றைக் கொண்டு வந்து கணவனிடம் காட்டினாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். ராக்ஃபெல்லர் அதைக் கையில் வாங்கிப் பார்த்துவிட்டு, 'வெரி லைட் திங்! இதனால்தான் பறந்துவிட்டிருக்கிறது!” என்றார். 'இருபதாயிரம் அப்பளங்கள் பறந்து போய்விட்டன. அப்புறம் பேப்பர் வெயிட்டுகள் வரவழைத்து ஒவ்வொரு அப்பளத்தின் மீதும் ஒவ்வொன்றை வைத்துவிட்டோம்' என்றாள் மிஸஸ் ராக். ராக்பெல்லர் தம்பதியர் உட்காருவதற்கு சோபா கொண்டு வந்து போடச் சொன்னான் பஞ்சு. ‘'வேண்டாம்! நாங்கள் தரையிலேயே உட்காருகிறோம்: என்று கார்ப்பெட் மீது உட்கார்ந்து கொண்டார் ராக்ஃபெல்லர். 'கோடீசுவரப் பிரபு கிஞ்சித் கர்வம் உண்டா?" என்று கூறி மகிழ்ந்தார் அம்மாஞ்சி. -