பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 91 'மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் எப்போது வருகிறார்கள்? என்று அவர் விசாரித்தபோது, முகூர்த்தம் வைத்ததும் வந்து விடுவார்கள் என்றார் மூர்த்தி. "முகூரட் என்றால்?" என்று கேட்டார் ராக்ஃபெல்லர். 'முகூரட் என்றால் மேரேஜ் நடக்கிற டைம்' என்று தன் ஹஸ்பெண்டுக்கு விளக்கிச் சொன்னாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'ஐ n முகூரட்டுக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணி விடலாமே!’ என்றார் ராக்ஃபெல்லர். 'அதற்குத்தான் அரேஞ்ச்மெண்ட் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் டென் மினிட்லிலே ரெடியாகிவிடும். அத்ற்குள் உக்கிராண அறையைப் பார்த்துவிட்டு வரலாம், வாங்க. இப்பத்தான் இண்டியாவிலேருந்து ஃபிளவர்ஸ், வெஜிடபிள்ஸ் எல்லாம் வந்திருக்குது என்று அழைத்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். . . . - உக்கிராண அறையில் மலை போல் குவிக்கப்பட்டிருந்த பூசணிக்காய்களையும், புடலங்காய்களையும் கண்ட ராக்ஃபெல்லர், 'பூசணிக்காயும், புடலங்காயும் மட்டும் ரொம்ப ஆர்த்தடாக்ஸ் போலிருக்குது. தே லுக் லைக் இண்டியன் சாதூஸ் வித் ஹோலி ஆஷ்!" என்றார். 'அவற்றின் நேச்சரே அப்படித்தான் என்றான் பஞ்சு ஒரு பூசணிக்காயைக் கையினால் தூக்கிப் பார்த்தார் ராக்ஃபெல்லர். அதன் காம்பு பிடித்துத் துக்குவதற்கு வசதியாக இல்லாமல் போகவே கீழே நழுவி விழுந்துவிட்ட்து. அவ்வளவுதான் உடனே அத்தனை பூசணிக்காய்களுக்கும் பிளாஸ்டிக்கில் கைப்பிடி ஃபிக்ஸ் செய்து விடும்ப்டி உத்தரவு போட்டுவிட்டார் அவர்