பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வாஷிங்டனில் திருமணம் | மிஸஸ் ராக்ஃபெல்லர். அதிலுள்ள கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றையும் உப்புமாவுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி அவற்றையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருந்தாள்! 'ரவா புட்டிங் எப்படி இருக்கிறது?’ என்று மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் கேட்டான் பஞ்சு. 'ஹா...ஹா!...” என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். அந்தச் சீமாட்டி ‘ஹா ஹா என்று கூறியதை நன்றாயிருக்கிறது என்று சொல்வதாக எண்ணிக் கொண்ட அம்மாஞ்சி, "ராக்ஃபெல்லர் மாமிக்கு இன்னும் கொஞ்சம் ரவா புட்டிங் போடுங்கள்' என்றார். 'ஹா ஹா...ஹாட் வெரி வெரி ஹாட் ரொம்பக் காரம்' என்று கத்தினாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'அடேடே க்ரீன் மிளகாயையும் சேர்த்துச் சாப்பிட்டு விட்டாப் போலிருக்கு. அதான் 'ஹாஹா' என்று அலறுகிறார். ஐஸ் வாட்டர் கொண்டாங்க' என்றார் அம்மாஞ்சி. சரியாக ஒன்பது மணிக்கு ராக்ஃபெல்லர் வந்து சேர்ந்தார். பிள்ளையின் தகப்பனார் தாயார் அவர்களைச் சேர்ந்த வாத்தியார் முதலியவர்களும் குறித்த நேரத்தில் வந்து விட்டனர். மிஸஸ் ராக்ஃபெல்லர், “திஸ் இஸ் மிஸ்டர் அய்யாஸாம் ப்ரைட்'ஸ் ஃபாதர், திஸ் இஸ் மிஸ்டர் கோபாலய்யர் 'பிரைட் குரூம்'ஸ் ஃபாதர்' என்று ஒவ்வொருவராகத் தன் ஹஸ்பெண்டுக்கு அறிமுகப் படுத்தினாள். - மிஸ்டர் ராக்ஃபெல்லர் சிரித்த முகத்துடன் அவர்கள் எல்லோரையும் "ஹவ் டுயு டு - ஹவ் டுயு டு என்று குசலம் விசாரித்தபடியே கைகுலுக்கி மகிழ்ந்தார்.