பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் & 98

ஜனநாயகத்தின் விசுவரூபம் தேர்தல்... அந்தத் தேர்தலில் பணக்காரர்களைப் போட்டியிடச் செய்து அவர்களிடம் குவிந்திருக்கும் செல்வத்தைப் பரவலாக்கிச் சட்டென்று சோசலி சத்தைக் கொண்டு வரலாம் என்பது அவர்கள் எண்ணம்... ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தலை திருவிழாப்போல் ஆண்டுதோறும் வரவைத்தால், நம் தலைவர்களின் நல்ல எண்ணம் அதிவிரைவில் ஈடேறும்.

1957 தேர்தல் என்று நினைக்கிறேன்... எங்கள் பக்கத்தில் ஒரு தொழில் அதிபர் நாடாளு மன்றத்திற்குப் போட்டி யிட்டார். அவர் மைந்தர் இருவர் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டனர். கரன்சி நோட்டுகள் சினிமா நோட்டீஸ் மாதிரி பறந்தன. பம்பரமாய்ச் சுழன்று தேர்தல் பணியாற்றிய அவர்களுடைய ஏஜண்டின் காதில் படும்படி காற்று வாக்கில் 'அங்கே கேணிக்கரையில் இரண்டாயிரம், செட்டிய தெருவில் ஆயிரம்' என்று இரண்டு பேர் பேசினால் போதும். 'காரில் ஏறுங்க சார், தாஜ்மகால் ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்" என்று காரைநிறுத்திக் கூப்பிடுவார். அவர்களோ, “எங்களைக் குதிரைப்பெட்டி ராஜமார்த்தாண்டன் சேர்வை வரச் சொல்லியிருந்தார். என்ன செய்வது? நீங்கள் விடமாட்டேன் என்கிறீர்கள்?" என்று பெரிதாய்ப் பிரியக்கடை பண்ணிக் கொண்டே வண்டியில் ஏறுவார்கள்.

இப்படி இரைப்பையையும் பையையும் நிறைத்துக் கொள்பவர்கள் தேர்தல் கலையில் விற்பன்னர்களாக வேஷம் போடுவார்கள்; எவ்வளவோ செலவு செய்தும் வேறு சில காரணங்களால் அந்தத் தொழில் அதிபரும் அவரது பிள்ளைகள் இருவரும் தோற்றுப் போனார்கள்... மக்கள் வேடிக்கையாக, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்