பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 rnr %• 65

பாட்டுப் பாடி முடிப்பது இப்போது வாடிக்கையாகி விட்டது. என்னசெய்வது? எப்படி விரட்டுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. கம்பெடுத்து நீட்டினால் எதிர்த்து உர் என்று முகத்தைக் காட்டுகின்றன. கல் எடுத்து எறிந்தால் யார் மேலாவது பட்டு 'எந்தக் குரங்கு எறிந்தது' என்று யாராவது திட்டித் தீர்க்கப் போகிறார்களே என்று பயமாய் வேறு இருக்கிறது.

ஏதாவது செய்தாக வேண்டும் என்று தீர்மானித்து எங்கள் தெருவில் உள்ள அனைவரும் கடைசி வீட்டுக்குப் புதிதாய்க் குடிவந்துள்ள காவல்துறை அதிகாரியிடம் சென்றோம். 'குரங்குகளின் ஏகாதிபத்தியம்' குறித்து முறையிட்டோம். அவரிடம் துப்பாக்கி இருக்கிறது என்பதைச் சமர்த்தாக ஞாபகப்படுத்தினார் ஒருவர். 'அவரோ எங்கள் துப்பாக்கிக்குக் குரங்கைச் சுட்டுப்பழக்க மில்லை என்று ஒரே வரியில் சொல்லிவிட்டார்.

வேண்டுமானால் தாசில்தாரைப் பாருங்கள் என்றார். தாசில்தாரிடம் சென்றோம், மகஜர் கொடுத்தோம். 'குரங்குகள் வந்து விட்டன என்றால் உங்கள் ஊர் குற்றாலம் ஆகிவிட்டது என்று நீங்கள் சந்தோஷப்படவேண்டும். நான் குற்றாலத்தில் இருந்தேன். எவ்வளவு மரங்கள்.... எவ்வளவு குரங்குகள்... நான் அங்கிருந்துதான் டிரான்ஸ்பர் ஆகி வருகிறேன் என்றார். குறும்புக்கார இளைஞன் ஒருவன் கூடவே 'பந்துக்களையும் கூட்டி வந்துவிட்டார் போலிருக்கிறது என்று மெல்லக் கிசுகிசுத்தான்.

“ஸார், நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் நாங்கள் குரங்குகளே வெளியேறு என்று கோஷம்போட வேண்டியதிருக்கும். ஊர்வலம், உண்ணா விரதம் நடத்த வேண்டியதிருக்கும். அந்த மூன்று குரங்குகளும் சொகுசாகக் குடியிருக்கும் அரச மரத்தைச்