பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் & ம

பதப்படுத்தி, பக்குவப்படுத்தி விலையுயர்ந்த தோல் பொருள்களைத் தயாரிக்கிறார்களாம்.

கொழும்பு நகரில் அண்மையில் நடந்த இனப்படு கொலையின்போது சாலையில் ஒரு திருப்பத்தில் ஒரு குவியல் தென்பட்டதாகவும் அது தமிழ்க் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழித்து எடுத்துப் போட்ட பிண்டங்களின் குவியல் என்று பக்கத்தில் நெருங்கிப் பார்த்தபோது தெரிந்ததாகவும் ஒரு பெண் பத்திரிகையாளர் குறிப்பிட்டிருந்தார். கோர இனவெறிக் கூத்திலும் அரக்க உள்ளம் படைத்த சில வியாபாரிகள் ஏற்றுமதிக்கு ஏதாவது கிடைக்குமா என்று அலைந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்த ஏற்றுமதித் தொழில் சிறந்து விளங்க ஒரு சில நாடுகளின் பெண்கள் மனமுவந்து 'அழிவுப்பூர்வமான உதவிகளைச் செய்கிறார்களாம். கணிசமான அளவு பணம் பெறலாம் என்ற பேராசையில் கருச்சிதைவு செய்து கொள்ள முன்வருகிறார்களாம். அரசாங்கம் அனுமதிக்கும் கருச்சிதைவுச் சட்டத்தின் சலுகைகளை எப்படி யெல்லாமோ பயன்படுத்துகிறார்களாம். கருவை வேண்டுமளவு வளரச்செய்து எந்தப் பக்குவ நிலையில் கேட்கிறார்களோ அந்தப் பக்குவ நிலைக்கு வந்தபின் கருச்சிதைவு செய்து தருகிறார்களாம்.

இந்தப் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியைச் சொல்லியாக வேண்டும்... கோச்செங்கணான் என்ற சோழ அரசனின் பிறப்புப்பற்றிய வியப்பான செய்தி அது. சுபதேவன் என்ற சோழமன்னனுக்கும் கமலவதி என்ற அரசிக்கும் பிறந்தவன் இந்தக் கோச்செங்கணான் என்பார்கள். கமலவதி பிரசவிக்க இருந்த நேரம்... அப்போது அரண்மனைச் சோதிடர் ஒருவர் இந்தக்