பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 77

அரும்பு, மொட்டு, மலர் என்று செடி, கொடிகளின் சீதனங்களைப் பருவத்துக்கு ஒரு பெயரிட்டு அழைப்பதைப் போல் செவ்விந்தியரில் சில பிரிவினருக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பெயர் வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டாம். பால்யத்தில் ஒரு பெயரும், வாலிபத்தில் ஒரு பெயரும், வயோதிகத்தில் ஒரு பெயரும் வைத்துக்கொள்வார்களாம்.

பாலகிருஷ்ணன் - கோபாலகிருஷ்ணன் - ராஜகோபால கிருஷ்ணன் - ரங்கராஜ கோபாலகிருஷ்ணன் - பூரீரங்கராஜ.... என்ற ஒரே ஆள் தான் வளர வளரப் பெயரையும் வளர்த்துக் கொண்டே போனால் என்ன? 'ஆளும் வளரனும் பெயரும் வளரணும் அதுதான்டா வளர்ச்சி என்று பட்டுக்கோட்டை பாட்டைத் திருத்திப் பாடினால் என்ன?

சில குடும்பங்களில் பையனுக்கு மருமகன் பெயர் இருந்தால் மாமியார் கூப்பிடமாட்டார்; மாமனார் பெயர் இருந்தால் மருமகள் கூப்பிடமாட்டார் இதனாலெல்லாம் பையனுக்கு பலபெயர் ஏற்பட்டுவிடும். வீட்டில் இராமன், வெளியில் கிருஷ்ணன் என்பதைப் போல் வீட்டில் ஒரு பெயர் வெளியில் ஒரு பெயர் உடையவர்கள் அதிகம். ஹெப்சிபா ஜேசுதாசனின் நாவல் ஒன்றின் பெயர் "மா-னி. பர்மாவில் குடியேறிய தமிழ்க் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த பெண் ராணி ஞானஸ்நானம் செய்த பிறகு கிரேஸ் அழகுமணி ஆகிறாள். பள்ளியில் சேர்த்ததும் அழகுமணி என்ற பெயர் பர்மியக் குழந்தைகள் வாயில் நுழையாமல் மணியாகி பிறகு மா-a ஆகிறது; மா-மா, ஷ்வே-மா, மா-தாண்-ஷ்வே, மா-கிம்-மியாஎன்பன போன்ற பர்மியப் பெயராக மாறுகிறது என்று கதாநாயகியை அறிமுகப் படுத்துகிறார். அன்னம் வெளியிட்டுள்ள இந்த அற்புதமான நாவலின் பெயரைப் பார்த்து ஏதோ பர்மிய