பக்கம்:விசிறி வாழை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 விசிறி வாழை

சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த தன் எண்ணத்தை, ஆசையை அடக்கிக் கொண்டவளாய் கலங் கிய உள்ளத்துடன் நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயன் ருள் பார்வதி.

ஹால் கடிகாரத்தில் மணி டேங் என்று ஒரே முறை அடித்து மணி ஏழரை என்பதை அறிவித்தது.

கை கூப்பி வணங்கியபடியே, ‘தங்களிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டேன். நேரம் போனதே தெரிய வில்லே...மன்னிக்கவும்.’’ என்று விடை பெற்றுக்கொண்ட பார்வதி, குமுறி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டவளாய் பாறையாகக் கனக்கும் இதயத்துடன் போய்க் காரில் ஏறிக் கொண்டாள்.

காரின் வேகத்தில் உள்ளே புகுந்து வந்த காற்று, பார்வதியின் மனப் புழுக்கத்துக்குச் சற்று இதமாக இருந்தது. வீட்டுக்குச் சென்றவள், நேராக மாடி அறைக்குப் போய்ப் பலகணியின் வழியாகச் சற்று நேரம் தெளிந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது நிர்மலமாக இருந்தது. அவளுக்கு எதிலுமே மனம் ஓடவில்லே. மனச்சுமை அவளே ஆழ்த்தியது. சோர்வும் விரக்தியும் அமைதியின்மையும் அவள் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமிழக்கச் செய் திருந்தன. நாற்காலியில் அமர்ந்தவள். கண்களை மூடியவாறே மேஜைமீதே கவிழ்ந்து கொண்டாள். சற்று நேரத்துக்கெல் லாம் அப்படியே அயர்ந்து விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/100&oldid=686947" இலிருந்து மீள்விக்கப்பட்டது