பக்கம்:விசிறி வாழை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 விசிறி வாழை

ஹாஸ்டல் கட்டடத்தை வந்து பார். அத்துடன் கல்லூரி யில் டெகரேஷன் வேலே நடந்து கொண்டிருக்கிறது. உனக்கு இதிலெல்லாம் ஒரு டேஸ்ட் உண்டே !...”

‘பெண்கள் கல்லூரிக்குள் நான் வரலாமா, அத்தை?’’ “தாராளமாக வரலாம்; அங்கே இப்போது கலே நிகழ்ச் சிக்காக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும். பாரதியும் இன்னும் சில பெண்களும் மட்டுமே வந்திருப்பார்கள். அவர் களைக் கண்டால் நீதான் வெட்கப்படுவாய் ரொம்ப வாயாடிப் பெண்கள் !’’ என்றாள் பார்வதி.

‘பாரதியா? யார் அத்தை அது? எஸ். பாரதி, பி. எஸ்.ஸி. ஸ்ெகண்ட் இயர் ஸ்டுடன்ட்தானே ! ஸ்லிம்’ மாக சினிமா ஸ்டார் நூடன் மாதிரி இருப்பாளே, அந்தப் பெண்ணு???

‘அவளே உனக்கு எப்படித் தெரியும், ராஜா? அத்தை யின் விழிகள் வியப்பால் மலர்ந்தன.

‘ரேடியோ க்விஸ் புரோக்ராமுக்கு அடிக்கடி வருகிற பெண்தானே? நானும் அவளும் க்விஸ் மாஸ்டரின் கேள்வி ஒன்றுக்கு ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் பதில் கூறிளுேம். மாஸ்டர் அத்தப் பெண்ணுக்குத்தான் பாயின்ட்” கொடுத்தார். பிறகு என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே லேடீஸ் ஃபஸ்ட் என்று சொல்லிக் கண் சிமிட்டினர்.”

‘அதென்னடா அப்படிப்பட்ட கேள்வி?’’ அத்தை கேட்டாள்.

‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்வமிந்த நாட்டிலே...... இந்தக் கவிதையைப் புனைந்த கவிஞன் யார்?’ என்பது கேள்வி. பாரதி என்று நாங்கள் இருவரும் பதில் கூறினேம். சபாஷ் என்று கூறிய மாஸ்டர், ‘உன் பெயர் என்னம்மா?’ என்று அந்தப் பெண்ணைக் கேட் டார் பாரதி” என்று நாணத்துடன் பதில் கூறினுள் அவள். அப்போதுதான் எனக்கு அந்தப் பெண்ணின் பெயர் தெரியும் என்று கூறினன் ராஜா.

வெரி ஷ்ரூட் கர்ல்! இவ்வாண்டு சாரதாமணிக் கல்லூரி நடத்திய அழகுப் போட்டியிலும்கூட அவளுக்கே முதல் பரிசு கிடைத்திருக்கிறது. இதற்காக ஆண்டுவிழாவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/12&oldid=686969" இலிருந்து மீள்விக்கப்பட்டது