பக்கம்:விசிறி வாழை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 விசிறி வாழை

எாசி சீ! இது ஒரு வயசா, என்ன? அறுபதாம் கலியாணத் துக்கே இன்னும் ஏழு வருஷம் இருக்கே?...??

சரி, காமாட்சி! இப்போது நான் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள். நீ என்ன செய்வே??? காமாட்சி சிரித்துக்கொண்டே, ‘உனக்கு மனைவியாக வருகிறவளை அண்ணி’ என்று கூப்பிடுவேன்’ என்றாள்.

காமாட்சியின் பதில் சேதுபதிக்குச் சற்று நிம்மதி அளித் தது. விகளயாட்டாகக் கேட்பது போலவே தன் உள்ளத் திலுள்ள சந்தேகங்களே யெல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்க லானர். - -

ம்ே...சரி; நீ அண்ணின்னு கூப்பிடுவே, பாரதி என்ன செய்வாள்??? -

‘அம்மா என்று கூப்பிடுவாள்.’’ சேதுபதி சிரித்தார். சிரித்துக்கொண்டே, “என் கேள்வி யெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது இல்லையா, உனக்கு!? என்று கேட்டார்.

வேடிக்கையாகத்தானே நீ கேட்கிறாய்?’ என்றாள் காமாட்சி.

  • நீ எப்படி நினைக்கிறே? நிஜமாகவே கேட்பதாக எண்ணிவிட்டாயா? அதுசரி; இன்னெரு முக்கியமான கேள்வியையும் கேட்டு விடுகிறேன். இப்போது நான் கல் யாணம் செய்துகொண்டால் உலகம் அதைப்பற்றி என்ன நினைக்கும்?’’
  • ஒன்றும் நினைக்காது கை கொட்டிச் சிரிக்கும்; அவ்வளவுதான். பாரதி குழந்தையா யிருக்கும்போதே நான் படித்துப் படித்துச் சொன்னேன். அப்போது நீ கேட்கவில்லை. சரஸ்வதியை மறக்க முடியாது. அவளுடைய ஸ்தானத்தில் இன்னெருத்திக்கு இடமளிக்க மாட்டேன் என்று சீறி விழுந் தாய். இப்போது இத்தன வயதான பிறகு, திருமணத்தைப் பற்றி நீயாகவே பேசுகிறாய். உலகம் என்ன நினைக்கும் என்று கேட்கிறாய், விளயாட்டாகக் கேட்பதாகச் சொல்கிறாய். உலகம் என்ன நிகணக்கும் தெரியுமா? குடுகுடு கிழவருக்குக் கலியாணம் டும் டும் கொட்டித் தாலி கட்டினர்’ என்று கேலி செய்யும்."
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/132&oldid=686983" இலிருந்து மீள்விக்கப்பட்டது