பக்கம்:விசிறி வாழை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்மூன்று 188

“யார் அவன்? எங்கே இருக்கிருன்? பெயர்?......?? தூண்டிக்கேட்டாள் பார்வதி.

டென்னிஸ் ப்ளேயர் கோபாலன்.” ‘யார் அது? கார்நேஷன் கல்லூரியில் படிக்கும் டென் னிஸ் சாம்பியன் கோபாலன? அவனுடன் உனக்கு எப்படிப் பழக்கம் ஏற்பட்டது?’’

டென்னிஸ் மாட்ச் நடைபெற்றபோது......?? ‘சரி; நீ வகுப்புக்குப் போகலாம்.’’ -

மீனு திரும்பி வகுப்பை நோக்கி நடந்தாள். அவள் நடையழகையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண் டிருந்த பார்வதிக்கு மீனவின்மீது துளியும் கோபம் வர வில்லை. மீனவின் மீது குற்றம் இருப்பதாகவும் தோன்ற வில்லை. அதற்குப் பதிலாக அவள்மீது அனுதாபமே பிறந்தது.

டெலிபோனே எடுத்துக் கார்நேஷன் கல்லூரியின் எண் களைச் சுழலவிட்டாள். அடுத்த கணமே அந்தக் கல்லூரியின் பிரின்ஸிபால் திருவாளர் வேதாந்தம் பேசத் தொடங்கினர்.

‘நான் தான் சாரதாமணிக் கல்லூரி பிரின்ஸிபால் பேசுகிறேன். தங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேசவேண் டும். இப்போது வந்தால் சந்திக்க முடியுமா?’ என்று கேட்டாள் பார்வதி.

‘தாங்களா இங்கே வருவதா? தங்களுக்குச் சிரமம் வேண்டாம். அரை மணிக்குள் நானே அங்கு வந்துவிடுகி றேன்’ என்றார் வேதாந்தம்.

“தயவு செய்து மன்னிக்க வேண்டும். என்னுடைய காரியமாகவே தங்களைப் பார்க்க வரப்போகிறேன். ஆகை பால் நான் அங்கே வருவதுதான் முறை. இதோ இப்போதே புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியபடி நாற்காலியை விட்டு எழுந்தாள் பார்வதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/137&oldid=686988" இலிருந்து மீள்விக்கப்பட்டது