பக்கம்:விசிறி வாழை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 விகிதி வாழை,

‘பாயசத்துடன் எழுந்து விடடாயே, மோர் சாப்பிட வில்லையா ராஜா?’ என்று கேட்டாள் ஞானம். -

‘ஹவுஸ் புல்!” என்று கூறிக்கொண்டே திருப்தியுடன் ஒர் எப்பம் விட்டான் ராஜா.

‘உனக்கு எப்போதும் இந்த சினிமாப் பேச்சுதான்... சரி, போய் காரை எடு; காலேஜுக்குப் புறப்படலாம்,’’ என்று அத்தை கூறி முடிக்குமுன்பே, ஓ.கே!” என்று வாச லுக்குப் பாய்ந்து ஓடினன் ராஜா. -

பார்வதி வாசல் ஹாலுக்கு வந்து நின்று பகவானையும், தேவியையும் அண்ணுந்து பார்த்து வணங்கிவிட்டுக் காரில் ஏறிக்கொண்டாள். கார் போர்ட்டிகோ'வை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், செவிட்டுப் பெருமாள் மரியாதை யாக முக்காலியை விட்டு எழுந்து நின்றன்.

‘அத்தை இந்தச் செவிடனுக்கு நீ வெளியே போகிற நேரம் மட்டும் எப்படியோ மூக்கிலே வியர்த்து விடுகிறது. மற்ற நேரங்களில் காதும் கேட்பதில்லை, கண்ணும் தெரிவ தில்லை. பெரிய வேஷக்காரன் அத்தை இவன்!...கையில் அல்லி அரசாணி மாலையைப் பாரு!’’ என்றான் ராஜா.

‘உன் மாதிரி ஹிட்ச்காக் படம் பார்க்கச் சொல் கிருயா, அவனை?’’ -

ஹாரன் செய்தபடியே காரைக் கலாசாலைக் காம் பவுண்டுக்குள் செலுத்திப் பிரின்ஸிபால் அறைக்கு முன்னல் கொண்டு நிறுத்தின்ை ராஜா. அந்த ஹாரன் சத்தம் கலா சாலேயின் மூலே முடுக்குகளுக்கெல்லாம் சென்று ஒலித்த போது, ஆங்காங்கே அதுவரை கசமுசா வென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் கப்சிப்-பென்றாகிப் பிரின்ஸிபால் வந்து விட்டார்’ என்ற எச்சரிக்கை உணர்வுடன் வேலை செய்யத் தொடங்கினர்.

‘'ராஜா! புதிய ஹாஸ்டல் கட்டடத்தில்தான் மீட்டிங் கும் கலே நிகழ்ச்சியும் நடைபெறப் போகின்றன. எலெக்ட்ரீ வழியனே வரச்சொல்லி யிருக்கிறேன். அதற்கு முன்னல், காகிதப் பூத் தோரணங்களால் ஹாலே அழகுபடுத்த வேண்டும். ஹாஸ்டல் மாணவிகள் கலர் காகிதங்களில் விதம் விதமான தோரணங்கள் தொடுத்து வைத்திருக்கிருச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/14&oldid=686991" இலிருந்து மீள்விக்கப்பட்டது