பக்கம்:விசிறி வாழை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 விசிறி வாழை

னச் சொல்லி யிருக்கிருன் என்றால் அது தங்கள்மீது அவனுக் குள்ள அக்கறையையே காட்டுகிறது’ என்றாள் காமாட்சி.

சேதுபதியைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பி ள்ை பார்வதி. ஆயினும் அந்த விருப்பத்தை அவள் வெளிப் படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாகச் சில கேள்விகள் கேட்டாள். .

உேங்க அண்ணு ரெம்ாபப் பிடிவாதக்காரரோ?” பார்வதி குழந்தை போல் கபடமின்றிச் சிரித்தபடியே கேட்டாள்.

அதை ஏன் கேட்கிறீர்கள்? சின்ன வயசிலிருந்தே பிடிவாதக் குணம் அதிகம். அவன் அப்பா ஒரு நாள் ஏதோ கோபமாகச் சொல்லி விட்டார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேறி விட்டான். அப்புறம் எப்படியோ கஷ்டப்பட்டுப் படித்துத் தானே விழுந்து எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தான். இப்போது லட்சக் கணக்கில் பணத்தைக் குவிக்கிருன். ம்...என்ன குவித்து என்ன பிரயோஜனம்!” பெருமூச்சுவிட்டாள் காமாட்சி,

‘ஏன்! இப்போது அவருக்கு என்ன குறைவு?’’ ‘ஒரு குறைவுமில்லே, சரஸ்வதியோடு வாழக் கொடுத்து வைக்காத குறைதான்...பாரதியைப் பெற்றெடுத்த சில வருடங்களுக்குள்ளாகவே அவள் இறந்து விட்டாள். பாவம் சரஸ்வதியின்மீது அவன் உயிரையே வைத்திருந்தான். அவள் மறைந்த பிறகு, ஆறு மாதம் சரியாகக் கூடச் சாப்பிட வில்லை. எந்நேரமும் பித்துப்பிடித்த மாதிரி கலங்கி நிற்பான். அப்போதுதான் அந்த வீட்டின் முழுப் பொறுப்பையும் நான் வந்து ஏற்றுக்கொண்டேன். அண்ணுவின் நிலை எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. ஒருநாள் அவன் தனியாக உட்கார்ந்திருந்த சமயம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்.

‘'நீ ஏன் அண்ணு இன்னெரு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?’ என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன பதில் சொன்னன் தெரி யு மா? இன்னொரு கல்யாணமா? சரஸ்வதியின் ஸ்தானத்தில் வேறொருத்திக்கு இடமா என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டே எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/178&oldid=687039" இலிருந்து மீள்விக்கப்பட்டது