பக்கம்:விசிறி வாழை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினெட்டு 178

‘பாரதி! நான் வீட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிருயா என்னுடன்...”

‘நான் இங்கேயே இருக்கிறேன், அப்பா! அத்தை இங்கே இருக்கும்போது எனக்கு மட்டும் அங்கே என்ன வேலே? பிரின் ஸிபாலுக்கு உடம்பு குணமாகிறவரை நானும் அத்தையோடுதான் இருக்கப் போகிறேன்’ என் ருள் பாரதி, பேஷ் அதுதான் சரி; உன் இஷ்டப்படியே செய்; ஆணுல் உன் பிரின்ஸிபாலுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. நீயாகவே படித்துப் பாஸ் செய்யவேண்டும். தெரிந்ததா?’’

கார் புறப்பட்டு வாசல் காம்பவுண்டைத் தாண்டிச் செல்லுகிறது.

பார்வதி அந்த மாதுளங் கனிகளைக் கவனித்தாள். அந்தச் சிவந்த முத்துகள் அவளைப் பார்த்துச் சிரித்தன. ‘பயித்தியமே உன்மீது இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும் சேதுபதியையா அலட்சியம் செய்கிறாய்? என்பதுபோல் தோன்றுகிறது.

ஹார்லிக்ஸுடன் வந்து நின்ற க மாட் சி யை க் கண்டதும் இப்படி உட்காருங்கள்’’ என்று கை காட்டினன் பார்வதி.

கொஞ்சம் ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு உடம்பு குணமாகும்வரை என்னை இங்கேயே இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிருன், என் அண்ணு...’ என்றாள் காமாட்சி.

‘ஓ! அப்படியானுல் அவரை யார் கவனித்துக் கொள் வார்கள்?'-பார்வதி கேட்டாள்.

‘வீட்டிலே சமையல்காரன் இருக்கிருன். பார்த்துக் கொள்கிருன். நான் அங்கே இருந்தாலும் என்னை ஒரு வேலை யும் செய்ய விடமாட்டான். நீ பேசாமல் உட்கார்ந்து கொண்டிரு. வேலைக்காரர்கள் கவனித்துக் கொள்வார்கள்’ என்பான். பிறர் துன்பப்படுவதை அவன் சகிக்கவே மாட் டான், இளகிய மனசு அவனுக்கு. இதுவரை என்ன அவன் யார் வீட்டிலும் தங்க அனு மதித்ததில்லை. அப்படிப்பட்ட வன் என்னை இங்கே அனுப்பி உங்களைக் கவனித்துக் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/177&oldid=687038" இலிருந்து மீள்விக்கப்பட்டது