பக்கம்:விசிறி வாழை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 - விசிறி வாழை

“நிஜமாகவே இந்த மசாலாவிலே இருந்த ஓர் இஞ்சித் துண்டைத் தின்னு விட்டேன். அதுதான்.’’ என்று கூறி மழுப்பினன் ராஜா.

‘பொய், பொய்! எதையோ என்னிடம் சொல்லாமல் மறைக்கப் பார்க்கிறீங்க...”

‘எங்க பிரின்ஸிபால் வந்திருக்காரு. நாம ரெண்டு பேரும் அவர் பாக்கறதுக்கு முந்தி எழுந்து போயிடணும்...’

‘அவர் சினிமாவுக்கும் வந்து சேர்ந்தால்?...?? ‘வர மாட்டார். சினிமான்ன அவருக்குப் பிடிக்காது...?? அடுத்த நிமிடம் இருவரும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டனர். - -

“இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பூரண ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். காலேயிலும் மாலையிலும் சற்று நேரம் தோட்டத்துக்குள் உலாவும் நேரம் தவிர, வெளியில் எங்குமே செல்லக்கூடாது?’ என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தாள் டாக்டரம்மாள். -

அறைக்குள்ளாகவே கட்டுப்பட்டுக் கிடக்கும் கொடுமை யைப் பார்வதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லே. கல்லூரிக்குப் போகாமல், கல்லூரியைக் காணுமல், கல்லூரி மாணவிகளுடன் பேசாமல், கல்லூரியில் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பதை அவளால் பொறுத் துக் கொள்ளவே முடியவில்லை.

அந்தக் கல்லூரியிலேயே படித்து, அங்கேயே உத்தி யோகத்தில் அமர்ந்து, அங்கேயே புரொபளராகி, கடைசியில் அந்தக் கல்லூரிக்கே பிரின்ஸிபாலும் ஆகிவிட்டாள் அவள். படித்த காலத்தில் கூரை வேய்ந்த சிறு சிறு ஷெட்டுகளே வகுப்பறைகளாக இருந்தன. இப்போது அந்தப் பழைய தோற்றமே அடியோடு மாறிப் புதிய புதிய கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லும், அவளுடைய முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஊக்கத்துக்கும் சான்று கூறிக் கொண்டிருக்கின்றன.

புறத் தோற்றத்தில் மட்டும் அந்தக் கல்லூரிக்குக் கவர்ச்சி தேடித் தரவில்லே அவள். அங்கே படித்துத் தேறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/190&oldid=689472" இலிருந்து மீள்விக்கப்பட்டது