பக்கம்:விசிறி வாழை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபது 198

காமாட்சி அம்மாள், மகள் பாரதி இரண்டு பேரையும் இங்கே கொண்டுவந்து விட்டிருப்பாரா? காமாட்சி கூட அடிக்கடி சொல்லுவாளே, உங்களைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும் ஓயாமல் பேசிக் கொண்டிருப் பார்’ என்று. அன்பும் அக்கறையும் இல்லையென்றால் அப்படி ஓயாமல் பேசுவாரா? டாக்டரம்மாளிடம் என் தேக நிலைபற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிருராமே! எனக்கு உடல் நலம் சரியில்லை என்பதற்காகத் தம்முடைய வெளியூர்ப் பயணங்களே யெல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிருராமே! இ ங் ேக வராமலிருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் அவர் கூற முடியாமலிருக்கலாம்.”

பார்வதி புரண்டு படுத்துக் கொண்டாள். சேதுபதியை மறந்து விடுவதற்கு, என் உள்ளத்தில் புகுந்து வேரூன்றிவிட்ட அந்த எண்ணத்தை அப்புறப் படுத்துவதற்கு வழியே கிடையாதா? இப்படியே, மனத்திற் குள்ளாகவே மறைத்து வைத்து அவர் நின்னவாகவே அவர் கவலேயாகவே, படுத்த படுக்கையாகவே இருந்து, ஒரு நாள் மறைந்துபோக வேண்டியதுதான? இந்த எண்ணம் என்னுள் ளேயே அழிந்து போக வேண்டியதுதான? நான் ஏன் அழிய வேண்டும்? என்ன அணு அனுவாக அரித்துக் கொண்டிருக் கும் இந்த எண்ணத்தை, நான் அழியாமலேயே அழித்து விடுகிறேன்.அவருடைய உள்ளத்தில் அந்த எண்ணமிருந்தா லும் நாளேயோடு மித்து விடுகிறேன். அப்புறம் நானும் அவரும் நிம்மதியாக வாழலாம். எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் பார்வதியின் உள்ளத்தில் ஒரு திடமான முடிவு ஏற்பட்டுவிட்டது. நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்த வேதனை அந்த விநாடியோடு தீர்ந்துபோயிற்று. மிகுந்த நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டாள் அவள்.

சடிகாரத்தில் மணி பதினென்றரை அடித்தது. “இப்போது அமைதியாகத் தூங்கப் போகிறேன்: என்று தனக்குத்தானே எண்ணிக் கொண்டவளாய்க் கண்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/197&oldid=689479" இலிருந்து மீள்விக்கப்பட்டது