பக்கம்:விசிறி வாழை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இரண்டு

முதல் உதவிப் பெட்டியை எடுத்து வர ஓடிய பெண்கள் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் திரும்பி வராமற் போகவே, ராஜாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த பாரதியை வெட்கம் சூழ்ந்து கொண்டது. அதுவரை அவளுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையில் நின்று கொண் டிருப்பதின் விபரீதம் புரியவில்லை. நேரமாக ஆகத்தான் அவள் அதை உணர்ந்தாள். நெஞ்சு படபடக்க, அவர்கள் வருகிறார்களா என்று கவலையோடு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜாவும்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வந்துவிடப் போகிறார்களே என்ற கவலேயோடு!

அப்போது அந்த ஹாலில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமே இல்லை.

ராஜா பாரதியிடம் ஏதாவது பேச வேண்டுமெனத் துடித்தான். ஆனல் என்ன பேசுவதென்று புரியவில்லை.

சினிமாக்களில் வரும் காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் நேரங்களில் என்ன பேசிக் கொள் வார்கள் என்று யோசித்துப் பார்த்தான். தமிழ்ப் படங் களாயிருந்தால், தத்துப் பித்தென்று ஏதோ பேசிக் கொண் டிருப்பார்கள்; அல்லது டுயட்” பாடியபடியே ஒருவரை யொருவர் துரத்திப் பிடிப்பார்கள். அவர்கள் தங்கள் இரட்டை நாடிச் சரீரத்தைச் சுமந்துகொண்டு அந்தப் பாட்டு முடியும்வரை காடு மேடெல்லாம் ஒடிக் களைத்து வியர்த்துப் போகும் நேரத்தில் இன்டர்வல்’ விட்டுவிடு வார்கள். ஹிந்தி நடிகர்களாயிருந்தால், அவர்கள் பேசுகிற பாஷையே நமக்குப் புரியாது. ஆங்கிலப் படமா .யிருந்தாலோ காதலன் காதலியின் முகத்தருகே தன்னு டைய முகத்தைக் கொண்டுபோய் ரகசியக் குரலில், “ஐ லவ் யூ” என்பான். அவளும் அவனது இரு தோள் களைப் பற்றிக்கொண்டு அதே வார்த்தையைத் திருப்பிக் கூறுவாள். இதற்குள் அவர்கள் ஒரு டஜன் முத்தங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/21&oldid=689493" இலிருந்து மீள்விக்கப்பட்டது