பக்கம்:விசிறி வாழை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இருபத்து மூன்று 217

ஓர் அறிவாளியை, உத்தமியை, உழைப்பாளியை அபூர்வ மாகத்தான் காண முடியும்...”*

கண்களை மூடியபடியே கட்டிலில் சாய்ந்து கிடந்த பார்வதிக்குச் சேதுபதியின் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவள் கண்களில் நீர் மல்கியது.

“உயிருக்கு விலே கிடையாது. பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது” என்ற வார்த்தைகள், அவள் இதயத்தை நெகிழ வைத்தன. அன்றாெரு நாள் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்துவிட்டதென்ற செய்தியைக் கேட்டபோதுகூட, அவர் பாபரப்புடன் உயிர்ச்சேதம் உண்டா?’ என்று கேட்டது அவள் தினைவுக்கு வந்தது. பணத்தைக் காட்டிலும் உயிரை அவர் எவ்வளவு உயர்வாக மதிக்கிறார்?’ அவருடைய குரல் மீண்டும் கேட்கவே பார்வதி அவர் பேச்சை ஆவலோடு கவனித்தாள்.

‘காமாட்சி! இந்தக் கலியாணத்தை முடிப்பதில் நான் அவசரப்பட்டு விட்டதாக உன் நினைப்பு அல்லவா?? நான் அப்போது சொன்ன காரணம் உனக்கு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும். உண்மைக் காரணத்தை இப்போது சொல்கிறேன், கேள்.

நான் சரஸ்வதியை மணக்குமுன் ஒரு நாள் பார்வதியைப் பெண் பார்க்கப் போயிருந்தேன். மாமாவும் மாமியும் என்ைேடு வந்திருந்தார்கள். பார்வதி அப்போது சாம்பசிவம் என்ற பெரியவர் ஒருவருடைய ஆதரவில் இருந்து வந்தாள். தாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தூளியில் படுத்திருந்த குழந்தை ஒன்று வீரிட்டு அழத் தொடங்கியது. பார்வதி ஒடிச்சென்று அந்தக் குழந்தையை எடுத்துத் தன்இடுப்பிலே வைத்துக் கொண்டாள். மாமாவுக்கும் மாமிக்கும் இந்தச் சம்பந்தத்தில் அவ்வளவாகத் திருப்தி இல்லை. எனவே, பிேன்னல் தெரியப்படுத்துகிருேம்’ என்று கூறிவிட்டு வந்து விட்டார்கள். எனக்குப் பார்வதியைப் பிடித்திருந்த போதி லும், அவன்யே மணந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்த போதிலும், மாமாவின் விருப்பத்துக்கு மாருகப் பேசும் திகலயில் அப்போது நான் இல்லை. எனவே மெளன மாகத் திரும்பி விட்டேன். அப்புறம்தான் சரஸ்வதிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/221&oldid=689506" இலிருந்து மீள்விக்கப்பட்டது