பக்கம்:விசிறி வாழை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து இரண்டு 27

அல்லது, என்னைக் கண்டதும் வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெளனமாக இருந்து விடுவாரோ? நானே அவரை அணுகி விஷயத்தைக் கூறிய பிறகு நிச்சயம் அவர் முகம் மகிழ்ச்சியால் மலரும். ரொம்ப தாங்ஸ்’ என்று குறைந்தது நாலந்து முறையாவது கூருமல் இருக்க

issi-i-ss’ss. x

அவள் விமானக் கூடத்தை அடைந்த சமயம் மணி பத்தேகால்தான். விமானம் புறப்படுவதற்கு இன்னும் பதினேந்து நிமிஷநேரம் இருந்தது.

பார்வதி உள்ளே போய் அவரைத் தேடியபோது, அவர் லெளஞ்சின் ஒரு மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்து தமது காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

பார்வதி அவர் எதிரில் பேய் நின்றபோது அவர் வியப்பை வெளிக் காட்டாமல் லேசாகப் புன்முறுவல் பூத்த படி வோருங்கள்! நீங்களும் எங்காவது வெளியூர்...’ என்று விசாரித்தார். &

‘தங்களைப் பார்க்கத்தான்...’ என்று கூறினுள் பார்வதி. -

‘அப்படி என்ன முக்கிய விஷயம்? இத்தனை நேரம் கல்லூரியில் தானே இருந்தேன்? அங்கேயே பேசியிருக்க லாமே? என்று மனத்திற்குள் யோசித்து எண்ணிக்கொண் டாலுப் ‘என்னைப் பார்க்கவா? அப்படி என்ன முக்கிய விஷயம்’ என்றவர், “அடேடே, நிற்கிறீர்களே! இப்படி உட்காருங்கள்’ என்று சோபாவைத் தன் கையில்ை தட்டிப் பார்வதியை அமரச்சொன்னர். -

மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்ட பார்வதி, தன் பையிலிருந்த அவர் மூக்குக் கண்ணுடியை எடுத்து, இதோ இதை மறந்து வந்து விட்டீர்கள் இது ரொம்ப அவசியமல்லலா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லையென்றால் முக்கிய காரியமே தடைப்பட்டுப் போகும். வேறு எதை மறந்தாலும் பரவா. வில்லை. வேறென்று வாங்கிக் கொள்ளலாம். மூக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/31&oldid=689528" இலிருந்து மீள்விக்கப்பட்டது