பக்கம்:விசிறி வாழை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விசிறி வாழை

“நிஜமாகவே எனக்கு வயதாகி விட்டதா? இல்லை; இல்லவே இல்லை. வயது, வாலிபம் வயோதிகம் என்பதெல் லாம் நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு வரம்புதானே?

மேஜைமீது கிடந்த ஸ்கேல் ஒன்று அவள் கண்ணில் படவே, அதைக் கையில் எடுத்துத் தன் இடது உள்ளங் கையை அதல்ை தட்டியபடியே, இதோ இந்த அங்குலம் காட்டு மரச் சட்டத்தில் நாமாகவே கோடுகளைப் போட்டு இதை ஸ்கேல் என்று கூறுகிருேம். இந்தக் கோடுகள் நாம் போட்டவை, இவை இல்லையென்றால் இது வெறும் மரச் சட்டம்தானே?

“அதைப் போலவே நாமாகவே நம் ஆயுளே வயது களால் வகுத்து வரம்பு கட்டிக் கொண்டிருக்கிருேம். அந்த வரம்புகள் இல்லேயென்றால், நாம் ந்ாமாகவே தான் இருப் போம். வயதாகி விட்டது என்பதை நாம் எப்போது உணர் கிருேம். நம் வயதைப்பற்றிச் சிந்திக்கும்படியான காரியங் கள் குறுக்கிடும்போதுதான். இப்போது ஏதோ ஒர் உணர்வு என் உள்ளத்தில் புகுந்திருக்கிறது. அந்த உணர்வே என் வயதைப்பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது.இத்தனை காலமும் அந்த உணர்வு என்னிடம் இல்லாததால் என் வயதுபற்றிய எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. கோலி விளையாடும் ஏழு வயதுச் சிறுவனக் காணும்போது தெருவில் நடந்து செல்லும் வாலிபன் தனக்கு வயதாகி விட்டதாக எண்ணு கிருன். கல்லூரியில் படிக்கும் மாணவனைப் பார்க்கும்போது காரியாலயத்தில் வேலே செய்யும் குமாஸ்தா தனக்கு வய தாகிவிட்டதென்று கருதுகிருன். ஆகவே, ஏதோ ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் வயதுபற்றிய சிந்தனை நமக்கு ஏற்படுகிறது.

புத்தகப் படிப்பிலேய்ே இதுகாறும் இரண்டறக் கலந்து கிடந்த பார்வதிக்குத் தன் வயதுபற்றிச் சிந்திக்கும் சந்தர்ப் பமே ஏற்படவில்லே. படிப்புக்கும், ஆராய்ச்சிக்கும் வயது இடையூருக இருப்பதில்லே. உண்மையில் வயது ஆக ஆகத் தான் அறிவு விசாலமடைகிறது. அறிவின் விசாலம் ஆராய்ச் சிக்கு உதவுகிறது. எனவே வயதாகிறதே என்ற எண்ணமே தோன்றுவதில்லை. - ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/36&oldid=689533" இலிருந்து மீள்விக்கப்பட்டது