பக்கம்:விசிறி வாழை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து மூன்று 97

அன்று கால கல்லூரிக்குச் சென்றதும் பூகோளப் பாடம் நடத்தவேண்டிய ஆசிரியைக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தது. எனவே, அன்று அந்த ஆசிரியை நடத்த வேண்டிய வகுப்புக்குத் தானே போவதென்று முடிவுசெய்து கொண்டாள். சரியாக மூன்று மணிக்கு, குறிப்பிட்டநேரத்தில் பி.எஸ்ஸி, வகுப்புக்குள் நுழைந்தாள் பார்வதி. நாற்காலியில் அமர்ந்தவள் யாரையோ தேடுவது போல் ஒரு முறை கண்ணுேட்டமிட்டாள். அந்த ஒரு பார்வையிலேயே பாரதி வகுப்புக்குள் இல்லை’ என்பதை அறிந்து கொண்டாள். ஆளுல் அவள் ஏன் வரவில்லை என்று மாணவிகளை விசாரிக்க வில்லை. அதற்குப் பதிலாக ரிஜிஸ்தரை எடுத்து அதற்கு முந்திய வகுப்பில் பாரதி ஆஜராகியிருக்கிருளா என்று பார்த்துக் கொண்டாள். அவள் பூகோள வகுப்புக்கு மட்டுமே மட்டம் போட்டுவிட்டுப் போயிருக்கிருள் என்பதை அறிந்த போது பார்வதிக்கு உள்ளுறக் குமுறியது.

‘பாரதியை எங்கே கானேம்?’ மிடுக்குடன் ஒலித்தது பார்வதியின் குரல். ..

தேலைவலி’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் மேடம்” என்றாள் ஒரு மாணவி.

‘ஒகோ, ஜாக்ரபி பிரொபஸர் வர மாட்டாள் என்று தெரிந்ததும் தலைவலி வந்து விட்டதோ? இன்று வெள்ளிக் கிழமையல்லவா? புதுப் படம் பார்க்கப் போயிருப்பாள். சரி சரி, நாகாக்கு அவள் வரட்டும்; சரியான முறையில் பாடம் கற்பிக்கிறேன்’ என்று மனத்திற்குள்ளாகவே கறுவிக் கொண்டாள் பார்வதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/41&oldid=689539" இலிருந்து மீள்விக்கப்பட்டது