பக்கம்:விசிறி வாழை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஐந்து 59

அல்லவா! இன்று நம் வீட்டுக்கு வந்து காத்திருக்கிறார்’’ என்றான் ராஜா.

‘அப்படியா? இதோ வருகிறேன்’ என்று ராஜாவுக்குப் பதில் கூறிய பார்வதி, சேதுபதியிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.

சேதுபதிக்கும் பார்வதிக்கும் இன்னும் வெகு நேரம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது.

பேசுவதற்கு வேண்டிய விஷயங்களும் அவர்களிடம் இருந்தன. சந்தர்ப்பமும் அதற்கு இடமளித்தது. அவர்கள் பேசினர்கள். ஏதேதோ பேசினர்கள். ஆல்ை இருவரும் தங்கள் இதய ஆழத்தில் புதைந்து கிடந்த ஓர் எண்ணத்தை மட்டும் வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இடமளித்தபோதிலும், ஏதோ ஒரு பெரிய சுவர் அவர்களுக்குக் குறுக்கே நின்றது. வயதாகி விட்டது என்ற கரணமே அந்தச் சுவராயிருக்குமோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/63&oldid=689563" இலிருந்து மீள்விக்கப்பட்டது