பக்கம்:விசிறி வாழை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்று 8

ஆறு மாதங்களுக்கு முன்புதான் பார்வதி-முதல் முறை யாக அவரைச் சந்தித்தாள். அவருடைய கெளரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, வார்த்தைகளைத் தராசிலே நிறுத்துப் போட்டுச் செலவழிக்கும் சிக்கனம், கல கல வென்ற குற்றமற்ற குழந்தைச் சிரிப்பு-எல்லாம் நினைவில் தோன்றி நெஞ் சத்தை நிறைத்தன. அவள் தன்னுள் வியந்துகொண்டாள். ஒரு முறை அந்த ஹாஸ்டல் கட்டடத்தின் கம்பீரத்தைக் கண்ணுற்றாள். இருப்பது ஒரே நாள். நாளேக் காலேக்குள் எல்லா ஏற்பாடுகளும் முடிந்தாக வேண்டும். மாலேயில் விழா ஒரே கோலாகலமாயிருக்கும். அவர் வந்து புதிய ஹாஸ்டல் கட்டடத்தைத் திறந்து வைப்பார். அழகாகப் பேசுவார். மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்வார் கள், கலே நிகழ்ச்சியின் குலூகலத்துடன் ஆண்டு விழா இனிது முடிவுறும். அப்புறம்?...மறுநாள் திங்களன்று காலே வழக்கம் போல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும்போது கலகலப்பெல்லாம் ஓய்ந்து, திருவிழாக் கோலம் கலந்து பேரமைதி நிலவும்-இந்தக் காட்சியையும் அவள் எண்ணிப் பார்த்தாள்.

  • ராஜா!’

மீண்டும் குரல் கொடுத்தாள் பார்வதி. பதில் இல்லை; பதில் கொடுக்க வேண்டியவன் அங்கே இல்லை.

கீழே சாம்பிரானிப் புகை கம்மென்று மணம் வீசி அந்தப் பங்களா முழுவதும் நெளிந்து வளைந்து அடர்த்தியாக மண்டி யது. அம்மம்மா! என்ன மணம்: அந்தத் தெய்விக மணத்தை துகரும்போது உள்ளத்தில் எத்தனை நிம்மதி பிறக்கிறது! முன்வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த கெடிகாரத்தின் பெண்டுலம் அமைதியாக ஊசலாடிக் கொண்டிருந்தது.

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், அன்னை சாரதா தேவியாரும் ஹால் சுவரின் இன்ைெரு புறத்தை அலங்களித்தார்கள்.

.‘H வீட்டில் மாட்டப்பட்டுள்ள படங்களே அந்த வீட்டில் வசிப்பவர்களின் உள்ளத்தைப் பிரதிபலித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/7&oldid=689570" இலிருந்து மீள்விக்கப்பட்டது