பக்கம்:விசிறி வாழை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்று 5

போட்டுத் தயாராக வைத்திருந்தாள் ஞானம். மணி ஒன்பதரை ஆயிற்று. தினமும் இதற்குள் சாப்பிட்டு முடிந் திருக்கும். இன்று கொஞ்சம் லேட் ராஜா வந்தால் சாப்பிட உட்காரவேண்டியதுதான். அது ஏனே, பார்வதிக்கு ராஜா இல்லாமல் தனித்துச் சாப்பிடத் தோன்றவில்லை. பழக்கமும் இல்லை. ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்கிறது; பெருமாளுக்கு அல்ல. வேப்பமரத்து நிழல் அவனே நல்ல உறக்கத்தில் ஆழ்த்தி விட்டிருந்தது. ராஜா அவனே ஏக வசனத்தில் திட்டிக்கொண்டே ஸ்கூட்டரை நிறுத்திக் கீழே இறங்கிக் கதவைத் தானே திறந்துகொண்டு உள்ளே சென்றான், காலேயில் செய்த கசரத்"தில் அவனுக்கு உடல் களைத்துப் போயிருந்தது. நல்ல பசி வேறு. சமையலறையில் கொதித் துக் கொண்டிருந்த தக்காளி ரசத்தின் வாசனை, சாம்பி ராணிப் புகையுடன் கலந்து வந்தபோது அவனுடைய பசியை மேலும் தூண்டியது.

வீட்டுக்குள் நுழையும் போதே அத்தை பசி! பசி!... வா அத்தை!’’ என்று எக்காளமிட்டுக் கொண்டே சமைய லறையை நோக்கி விரைந்தான். நொடிப் பொழுதில் காக்கி உடையைக் களைந்து, வேறு உடை மாற்றிக்கொண்டு மணையில் போய் உட்கார்ந்துவிட்டான்.

‘தக்காளி ரசம் வாசனை மூக்கைத் துளைக்கிறதே ! என்ன சமையல் இன்றைக்கு! அப்பளம் பொரித்திருந்தால் முதலில் கொண்டு வந்து போடு. அத்தை வருகிறவரை அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பசி தாங்கவில்லை. உஸ்ஸ்!... இடியட் பெருமாள்! நெற்றி முழுதும் நாமத்தைப் பட்டையாகத் தீட்டிக்கொண்டு...... உட்கார்ந்தபடியே எப்படித்தான் நாள் முழுவதும் தூங்க முடிகிறதோ அவனால்!...” வார்த்தைகளைப் பொரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான் ராஜா.

சமையலறையில் பச்சைப் பட்டாணியும் முட்டைக் கோளம் எவர்ஸில்வர் வாணலியில் இளம் பதமாக வதங்கிப் பக்குவமாகிக் கொண்டிருப்பது அவன் கண்ணில் : - -

‘அந்தக் கறியில் கொஞ்சம் கொண்டுவந்து போடு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/9&oldid=689592" இலிருந்து மீள்விக்கப்பட்டது