பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 擅翼

அடுத்த நாள்காலை அவை கூடிற்று அறிஞர்

பெரு மக்களால், அழைக்கப்பட்ட அரசன், நாடி வந்தான்் அவையை!

சின்னஞ் சிறு சந்தனப் பெட்டியைத் தனது கைகளிலே ஏந்தியபடியே, அறிவையே அமைதியாகவும் அடக்கமாகவும் கொண்ட ஞானி ஒருவர், அரசவையுள் நுழைந்தார்!

சென்னியைச் சிறிதே சாய்த்தவாறே, "கொற்றவா! எல்லாக் காலத்திலும், எல்லா மக்களி டத்திலும் நடைபெற்ற மிக முக்கியமான சம்பவங்களடங்கிய சரித்திரத்தை, இந்த சந்தனப் பெட்டிக்குள்ளே பார்க்கலாம்” என்று, ஒரு சந்தனப் பெட்டியை மன்னனிடம் கொடுத்தார் ஞானி!

திறந்தான்் சந்தனப்பெட்டியைப் பாராள்வோன்!

இளம் மான் தோலின் மென்மயிராலான மெத்தையின் மேல், ஒரு சிறு காகிதத் துண்டு இருந்தது. ஒரே வரியால் எழுதப்பட்ட வாசகத்தை அதன் மேல் அரசன் கண்டான்.

'அவர்கள் பிறந்தார்கள்! வாழ்ந்தார்கள்! இறந்தார்கள்!” என்று எழுதப்பட்ட வாசகம் அது!

கருத்தைக் கண்ட காவலன் வெட்கி, வாய் மூடிக் கொண்டான்!.

இவ்வாறு எழுதப்பட்ட மரபு வழிக் கதைகள், நம் நாட்டிலே பற்பல உள்ளன!

இதைப் போல, அறிவியலுக்காக அரும்பாடு பட்டு அயராது உழைத்த அறிஞர் பெருமக்களைப் பற்றி விரிவாக எழுதுவதென்றால், ஏராளமான தொகுதிகள் எழுதலாம்.