பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 to விஞ்ஞானச் சிக்கல்கள்

அவர் கொல்லப்பட்டு நூற்றி நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கொடுமையான கோரச் செயல்பற்றி இப்போது பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது மிக வருந்தத்தக்க சம்பவமாகும்.

இந்தத் துப்பறியும் வேலை, கிளாஸ்கோ நகரிலே உள்ள ஸ்காட்ச் நகரின் மருத்துவர்களால் துவங்கப்பட வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது.

டாக்டர் ஸ்மித், டாக்டர் ஃபேர்ஷிப் வுட் என்ற இரு மருத்துவ நிபுணர்கள், இந்த மரண வழக்கை எடுத்து வாதாடினார்கள்.

இந்த மருத்துவ மேதைகள், உலகில் உள்ள பல பொருட்காட்சி நிலையங்களுக்கு ஒர் அதிசயமான வேண்டுகோளை விடுத்து விட்டு, தங்களது துப்பறியும் பணியிலே தீவிரமாக முனைந்தார்கள்.

அந்தந்த பொருட்காட்சிச் சாலைகளில், அவரவர் திரட்டி வைத்திருக்கும் பொருட்களில், பிரெஞ்சு மாவீரனான நெப்போலியனுடைய மயிர்க் கற்றைகள் ஏதாவது சேகரித்து வைக்கப்பட்டிருக் கின்றனவா என்பதைத் தீவிரமாக அந்த மருத்துவர்கள் புலன் விசாரணை செய்தார்கள்.

அந்த மருத்துவர்களுக்குரிய பதிலைத் தந்த பொருட்காட்சி நிலையங்களிலே இருந்து அறிக்கைகளாக வர காலத் தாமதம் ஆயிற்று.

இருப்பினும், அதிர்ஷ்ட வசமாக அவர்கள் கேட்டவாறே, அங்கங்கே இருந்து சாதகமான பதில்கள் வந்தன. -

நெப்போலியன் இறந்த சில மணி நேரங்கள் கழித்து, அவனது தலையிலே இருந்து வெட்டி