பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 實蠶畫鬣? இரசாயன மூலகங்களிலே உள்ள ஏதோ ஒரு பொருளைப் போன்றதாகவும் அந்த விஷம் இருந்திருக்கலாம்.

நெப்போலியன் போனஃபார்ட், இரசாயன மூலகங்களிலே அமைந்த விஷத்தால் கொல்லப் பட்டிருக்கலாம் என்ற வதந்தியும் தோன்றியது.

இவற்றை எல்லாம் இப்போது நிருபிப்பது எப்படி? நினைத்த நேரத்தில் நினைத்ததை நினைத்தபடி யார் வேண்டுமானாலும் அவர் நஞ்சேற்றப்பட்டதால் சாகடிக்கப்பட்டார் என்று கூறலாம்.

னால், உரிய சான் இக்கு எங்கே போவது?

@

இப்படித்தான்் அந்த மர்மக் கொலை நடை பெற்றிருக்க வேண்டுமென்று, நினைப்பதற்கு எந்த முடிவும் அதுவரை கிடைக்கவில்லை.

அரசியலில், இனியும், இப்படியும் ஏற்படக்கூடாது என்ற முற்போக்கு எண்ணங்கொண்ட சாட்சியங்களும் இந்த கொலைக்குச் சாட்சியம் கூற முன் வரவில்லை.

ஆனால், நிச்சயமான - நிருபணத்திற்கேற்ற முறையில், கொலை நடந்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக இருந்தது.

மாவீரன் நெப்போலியனைப் புதைத்த கல்லறையிலே, அவரது உடற் கூறுகள் அழிந்தது போக, எஞ்சியுள்ள அவரது சவத்தைப் புதை குழியிலே இருந்து தோண்டி எடுத்துப் பரிசோதித்து, அந்த மாபெரும் வீரனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை - அவச் செயலைப் போக்க வேண்டும்.