பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧懿鲁 விஞ்ஞானச் சிக்கல்கள்

எப்படிப்பட்ட நஞ்சைக் கொடுத்து அவரைக் கொலை செய்திருப்பார்கள்?

கொலைகாரர்கள் கையாண்ட சூழ்ச்சி முறைகள் என்ன? என்பதைக் கூற இயலாமல், அந்நாட்டு மக்களும் அதிகாரிகளும் குழம்பிக் கிடந்தார்கள்.

நெப்போலியன் இறந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலே, மனித இனத்தைக் கொல்லுகின்ற பல்வேறு வகையான நஞ்சுகள் விஞ்ஞான உலகத்திலே கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.

இந்த அடையாளம் தெரியாத மர்மக் கொலை யைச் செய்தவர்கள், அது போன்ற பல்வகையான விஷங்களையோ விஷ வாயுக்களையோ பயன்படுத்திக் கொன்றிருக்கிறார்கள்.

அவருடைய மரணம், அரசினரின் திட்டமிட்ட சதியினாலே உருவான மரணமே தவிர தனிப்பட்டவர்களால் செய்யப்பட்டதாகக் காணப் படவில்லை.

இந்த சுவையற்ற நஞ்சு வகைகளைக் கொடுத்து, அந்த வீரனைக் கொலை செய்ய என்ன அவசியம் எதிரிகளுக்கு ஏற்பட்டதோ'

அதனாலேதான்் இந்த அரசியல் பலி, இதுவரை சந்தேகத்திற்குரியதாக வராமல் அப்படியே அழுத்தப்பட்டு மறைந்திருந்தது.

நெப்போலியனுக்குத் தரப்பட்ட விஷம், அதை அவர் ஏற்றதும் சாகக் கூடியதான் உறுதிப் பொருளாக அது இருக்கவில்லை.

ஆந்த விஷத்திலே திரண்டிருக்கும் சக்தி, அவரது உயிர் நிலையில் சிறுகச் சிறுக ஊடுருவி, படிப்படியாகக் கொலை செய்திருக்க வேண்டும்.