பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 芒翼5 மக்களில் சிலர் இன்ன்ைறு தான்் அப்போது நம்பினார்கள். ஆனால், இப்போது, 'தக்க காரணங்களின்றி அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு நம்பத் தயாராக இல்லை என்று அவர்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பினார்கள்.

உலகில் பல பெரிய மாமன்னர்களின் அதிகாரிகள், உலகையே உலுக்கிக் காட்டிய அந்தச் செருமுனை செம்மல், தனது இறுதி நாட்களில் இயற்கையாக இறக்கவில்லை. நஞ்சு கொடுத்துதான்் அவர் சாகடிக்கப்பட்டார்” என்ற எதிர் நடவடிக் கையை வற்புறுத்தி எழுப்பினார்கள்.

இந்த எதிர்ப்புச் சக்தி, பிரான்ஸ் நாடு முழுவதும் காட்டுத் தீயெனப் பரவலாயிற்று. மக்கள் குரல் ஒவ்வோர் இடத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்தது.

நெப்போலியன் மரணமடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்குத் தான்ே அவர் ஒரு மரண சாசனம் எழுதி வைத்தார்.

'பிரிட்டனிலே ஆட்சி செலுத்துகின்ற சிலரால் நான் கொல்லப்படலாம். அவர்களுடைய கையாட் கள் இதை ரகசியமாய் செய்து முடிப்பார்கள் என்று, அவர் தனது மரண அறிக்கையிலே குறிப்பிட் டிருக்கிறார்.

அரசியல் வஞ்சத்திற்காகவும், போர்முனைப் பழிக்காகவும், அந்த போர் வீரன் அவரது எதிரிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உறுதியாகிறது.

நெப்போலியனுடைய கடைசி கால மரண உயில், மக்களது சந்தேகத்தை பலமாக உறுதிபடுத்துவதாக உள்ளது என்று, அதிகார வர்க்கமும் - மக்கள் மன்றமும் ஒரே குரலில் தங்களது எதிர்ப்பை எதிரொலித்தன.