பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நெப்போலியன்

மரணச் சிக்கல்

பிரான்ஸ் நாட்டு மா மன்னன் முதலாம் நெப் போலியன் போனஃபார்ட், ஒரு மாவீரனாக உலக வரலாற்றிலே உலா வந்தான்்.

கி.பி.1821 - ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் செயிண்ட் எ லினா என்ற தீவிலே சிறை வைக்கப்பட்டு மாண்டான்.

அந்த நேரத்திலே பிரான்ஸ் நாட்டை ஆட்சி செய்த அரசு அதிகாரிகள், நெப்போலியனுடைய வயிற்றிலே புற்று நோய் ஏற்பட்டதால் அவர் இறந்தார் என்று அறிவித்தார்கள்.

புற்று நோயால் தான்் அவர் காலமானார் என்று உலகத்தின் ஒரு பகுதியும் நம்பியது.

ஆனால், அவரது உடல் நல்ல முறையிலே அடக்கம் செய்யப்பட்டதற்குப் பிறகு, அம் மாவீரனுடைய மரணம் ஒர் அரையாண்டுக்குள் ஒர் அதிசயமான பிரச்சினையாக உருவெடுத்தது.

உலகப் புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் அண்டோமாச்சி என்பவர், 'நெப்போலியன் புற்று நோயால் மரணமடையவில்லை’ என்று, உலகையே திகைப்பிலாழ்த்தும் ஒர் அறிக்கையை அப்போது வெளியிட்டார்.

'நெப்போலியனுடைய மரண வரலாறு உறுதியானதுதான்் என்று, மீண்டும் அந்நாட்டு அரசினர்களால் நம்ப வைக்கப்பட்டது.